சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. ஆனாலும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய நெருக்கடிநிலை காணப்படுவதும் உண்மைதான். அரசியலைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறாயின் யூன் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்பதாக தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் கிடைக்கும் தகவல்களின்படி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவே கூறப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில்தான் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ...
Read More »கொட்டுமுரசு
வானம் தனது நீல நிறத்தை மீட்டுக்கொண்டது!
ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு மேலை வானத்தில் பார்க்காத நீலம் ஒன்று படர்ந்துகொண்டே மெல்ல அடர்வதையும் பார்க்கலாம். இன்ன நிறம் என்று சொல்ல இயலாத பின்புல வெளி ஒன்றில் நேற்றுவரை கட்டிடங்கள் அமுங்கிக் கிடந்தன. இந்தக் கட்டிடக் கலைப் பரிதாபங்களும் இன்று அடர் மஞ்சள், கருஞ்சிவப்பு, வெளிர் பச்சை என்ற வண்ணங்கள் மினுக்க வானத்தின் ...
Read More »278 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட கறுப்புநாள் இன்றாகும் ..!
அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் ...
Read More »தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை!
ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட நேர்காணலின் போது தெரிவித்தார். அடுத்த கட்டமாக தேர்தலை ...
Read More »திட்டமிட்டதொரு பொருளாதார போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா ?
சீனாவை மையப்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதுடன் அந்த ஸ்தாபனத்திற்கான நிதி உதவியையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன ? உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதா ? மேலும் உலகில் இவ்வாறானதொரு சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதா ? போன்ற பல கேள்விகள் அனைவர் மத்தியிலும் காணப்படுபவையாகும். மறுப்புறம் ஆயுதப் போராக அல்லாது பொருளாதாரம் மற்றும் உலக தலைமைத்துத்தை மையப்படுத்தியதொரு இராஜதந்திர போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா ...
Read More »கொரோனா வைரஸ் : புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்!
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன. இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ‘ போர் ‘ ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத — முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. ...
Read More »டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும்! – மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்
டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் – 19 நோயினால் ...
Read More »நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 அகதிகள் மீட்பு- 24 பட்டினியால் மரணம்!
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்படகொன்று நடமாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த ...
Read More »கொவிட்-19 -நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம்!
– உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மிகவும் நீண்டகாலத்துக்கு நடத்தவேண்டிய சாத்தியப்பாடு இருப்பதாக கூறியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானியான வைத்தியர் சௌமியா சுவாமிநாதன், வேறு பொதுச்சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்த்து கடைப்பிடிக்கப்படாதபட்சத்தில் ஊரடங்கு மாத்திரம் பயனுறுதியுடையதாக அமையமுடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். காசநோய் மற்றும் எச்.ஐ.வி. தொடர்பாக 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்த ;வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் முன்னர் இந்திய அரசாங்கத்தின் சுகாதார ஆராய்ச்சிக்கான செயலாளராகவும் 2015-2017 காலகட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸிலின் பணிப்பாளர் நாயகமாகவும் ...
Read More »கரோனா வைரஸ் தாக்குததல் வரும்; 10 ஆண்டுகளாக உலகை எச்சரித்த பில்கேட்ஸ்
கரோனா வைரஸ் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் எச்சரித்து வந்துள்ளார், அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் கடுமையாக இதுகுறித்துப் பேசி வந்துள்ளார். யுத்தத்துக்குத் தயாராவதை விட வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் என பில்கேட்ஸ் வலியுறுத்தியதை உலக நாடுகள் அலட்சியம் செய்ததால் இன்று அதற்கான விலையைக் கொடுக்கின்றன. உலகளாவிய தொற்று பாதிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் பேசி எச்சரித்து வருகிறார். தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கும், மருந்து கண்டுபிடிக்கவும் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் தனது வருமானத்தின் ...
Read More »