கொட்டுமுரசு

தமிழ் பண்பாட்டின் சின்னமாக விளங்கவல்லவர் எவரோ அவரே தலைமைதாங்க முடியும்!

“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ...

Read More »

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், ...

Read More »

7 பேர் விடுதலை சாத்தியம் ஆகுமா?” என்ன சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்?

28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் ...

Read More »

விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு காத்திருக்கும் சவால்!

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களைத் தரும் என்றோ, இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது.  விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அதுதான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல.  தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம், எல்லோராலும் இலகுவாக செய்து விட முடியாது தமிழ்த் தேசியக் ...

Read More »

அரவணைப்பே தற்கொலைக்கான தடுப்பு மருந்து!

தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’  என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்ஃபீல்டு ஜேமிசன். உலகில், சாதாரண மனிதர்கள் முதல்  சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நீளமானது. தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றன என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது. சமீபகாலமாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் ...

Read More »

மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா?

கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட ...

Read More »

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்!

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார். பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, ...

Read More »

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்!

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால‌ நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை ...

Read More »

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் ...

Read More »

ஜுர்கென் ஹெபர்மாஸ்: அறிவுஜீவியின் இலக்கணம்!

என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த அறிவுஜீவிகளுக்கு எட்வர்ட் சய்யீத் பெரிய கதாநாயகர். கிழக்கு நாடுகளை விமர்சித்து எழுதிய மேற்கு நாடுகளின் அறிவுஜீவிகளைத் தாக்கி அவர் எழுதிய கட்டுரைகளால் நாங்கள் பூரிப்படைந்தோம். மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் – இஸ்ரேலின் குற்றச்செயல்களை அவர் கண்டித்த விதத்தையும், பாலஸ்தீனர்களுக்குக் காட்டிய பரிவையும் மிகவும் மெச்சினோம். என்னுடைய நண்பர்களில் சிலர் வளர்ந்த பிறகும் சய்யீத் மீது கொண்டிருந்த பக்தி குறையாமல் இருந்தனர். எனக்கோ லேசான அலுப்புத் தட்டியது. கீழ்த்திசை நாடுகளின் இலக்கியங்களைப் படிக்கப் படிக்க நல்ல புரிதல் ...

Read More »