கொட்டுமுரசு

வடமாகாணமும் கல்வி நெருக்கடியும்!

வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத்  தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாகாணமாக உள்ளது. க.பொ.த ...

Read More »

11 இளைஞர்களும்; கரன்னாகொடவும்!

சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், மனித உயிர்களுக்கு மதிப்பின்றிப் போயுள்ளது. இது, ...

Read More »

முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்!

  இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ...

Read More »

புற்றுநோயில் இருந்து மீண்ட வைஷ்ணவி பூவேந்திரன்

பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை. நாணச் சிரிப்புக்கு பதிலாக தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, கை கால்களில் மருதாணி சிவப்பு, உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு, செந்நிறப் புடவை என அழகாக தோற்றமளித்தாலும், தலையில் முடி இல்லாதது ஒரு குறையாக தெரிகிறதா? இந்த மணப்பெண்ணின் தலையில் மட்டும் மலர்கள் இல்லை என நினைக்கவேண்டாம், இந்தப் பெண் கடந்து வந்த பாதையும் ...

Read More »

சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்!

இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை கைவிடுமாறு மேற்குல நாடுகள் அழுத்தமளிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் இருந்தவாறே வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் தாங்கள் பங்கேற்றுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் நிலைப்பாடுகள் எவ்வாறாகவுள்ளன? பதில்:- இலங்கை தொடர்பான ...

Read More »

பாலியல் கொடூரங்கள்: காரணிகளை, பின்னணிகளை அலச வேண்டாமா?

எளிதாகச் செய்ய முடிகிறது.  பெண்ணை ஏமாற்றி, அச்சுறுத்தி தங்கள் வலைக்குள் விழவைக்கும் கண்ணிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். அதிகாரப் பின்புலம் இந்த அழுகையை அரசியலாக்கக் கூடாது என்பது சரியான கருத்துதான்.  ஆனால், இதன் பின்னே இருக்கும் அரசியலை சொல்லாமல் இருக்கவும் முடியாது.  இந்தக் குற்றத்துக்குப் பின்னே இருப்பவர்களை அடையாளம் காட்டுவதை, அவர்கள் நேற்றுவரைக்கும் எந்தப் பயமுமின்றி இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும், பல பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதை, ஏன் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்பதில் அரசியல் ஆதாயம் இருக்கிறதா ...

Read More »

தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்!

ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று விசாரித்தால், ...

Read More »

முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார். இலங்கை அம்பாறை மாவட்டம் – விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது ...

Read More »

சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா?

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்? 2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள், தங்களுடைய தலைமையை நம்பக்கூடிய வகையிலும் ...

Read More »

மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது! – நிலாந்தன்

2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட ...

Read More »