கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆரோக்கியமான இளைஞர்கள் லண்டனில் பலியாகி உள்ளனர். 13 வயதுடைய இஸ்மாயில் முகமது அப்துல்வாஹாப், மற்றும் 19 வயதுடைய லூகா டி நிக்கோலா, ஆகிய இருவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் பலியாகி உள்ளனர்.. பிரிக்ஸ்டனைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவரான இஸ்மாயில், கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பின் கடந்த வியாழக்கிழமை சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மறு நாள் அவர் எவ்வாறு தொற்று நோய் பரிசோதனைக்கு ...
Read More »கொட்டுமுரசு
மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்!
அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது. இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே, சமர்க்களம் ஆக்கியது எனலாம். அதாவது, கதாநாயகன் எவற்றை எல்லாம் விரும்பிக் (நியாயமாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய வேண்டுதல்கள்) கேட்டார் என, ஒவ்வொரு வரிகளும் எடுத்து இயம்புகின்றன. அந்தப் பாடலின் ஒரு வரியே, ‘மூடி இல்லாத முகங்கள் கேட்டேன்’ என்பதாகும். ஈழத்தமிழ் மக்களுக்கும், அந்த பாடல் வரிகள் அப்படியே பொருந்துகின்றன. ...
Read More »கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!
கரோனா தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் வழியே புதுப் புது விஷயங்களைக் கண்டறியும் நிபுணர்கள் கழிப்பறைச் சுத்தமும் மிக முக்கியம் என்கிறார்கள். தொற்று ஏற்பட்டவர்களில் சரிபாதி நோயாளிகளுக்குச் செரிமானக் கோளாறு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்றாளர்கள் மலம் கழிக்கும்போது அதன் வழியாகவும் கரோனா வைரஸ் வெளியாகிறது. ஆகவே, ஒவ்வொருவரும் மலம் கழித்துவிட்டு, கழிப்புச் சாதனத்தை நன்கு சுத்தம் செய்வது அவசியம். கூடவே, ஒவ்வொரு முறையும் கழிப்பறைக்குச் செல்லும்போதும், கழிப்பு முடித்துத் திரும்பும்போதும் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதேபோல், ஒருவர் கழிப்பறைக்குச் ...
Read More »உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத்தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா!
சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது. சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், ...
Read More »உறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை
நியுயோர்க்கின் மருத்துவர் காமினி டுபேயிற்கு நகரத்தின் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரிற்கு மரணம் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பது தெரிந்திருந்தது. ஆனால் அது இப்படியானதாக ஒரு போதும் இருந்ததில்லை.கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்,சுவாசிக்க முடியாமல் வென்டிலேட்டரில் திணறுவது,நோய் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான விதிமுறைகள் காரணமாக நோயாளியை உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ,போன்ற சூழல் காணப்படுகின்றது. அனேக தருணங்களில் நோயாளிகள் தங்கள் படுக்கையில் தனித்து மரணிப்பார்கள்,என தெரிவிக்கும் டுபே நான் ஐசியூவிலிருந்து உறவினர்களை அழைத்து விடயத்தை தெரிவிக்கும்போது அவர்களின் துயரத்தை பார்ப்பதும், ...
Read More »நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில்
நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தபோது, “அப்படியென்றால், வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?” என்று, ஊடகவியலாளர் தரப்பில் வினாத் தொடுக்கப்பட்டது. அப்போது அவர், “தேர்தல் எப்போது நடக்க வேண்டும் என்பதைக் கொரோனா வைரஸ்தான் தீர்மானிக்கும்” என்று சொல்லியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இந்த நாட்டினது நிலைமையாகும். கொரோனா என்ற, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ்தான் நமது அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத் தன்மையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இல்லை. உலக வரைபடத்தில், ஒரு ...
Read More »எப்படி இருக்கிறது ஜெர்மனி?
மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது ...
Read More »”அம்மா நான் மரணித்து விடுவேனா?”
முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தாயொருவர் தனது மகனை நினைத்து கண்ணீர் வடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஐந்து வயது மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, மரண விளிம்பில் இருப்பதால் தான் மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு தாய்மாரும் தனது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். குறித்த தாய் மேலும் குறிப்பிடுகையில், 30 வயதான தனக்கு, ஐந்து வயதுடைய மகனொருவர் இருப்பதாகவும், குறித்த குழந்தை மிகுந்த ...
Read More »கொரோனா தீவிரமடைகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 35 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 554 பேர் ...
Read More »அநியாயமோ, அறியாமையோ?
கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன. இவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா ...
Read More »