கூட்டமைப்பு அரசைப் பாதுகாப்பதாகவும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்வதில்லையெனவும் முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்ச. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? என்பதை அவர் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களுக்கு எதையும் வழங்கி விடக்கூடாது என்பதில் மகிந்த தீவிரமாக உள்ளார். புதிய அரசமைப்பின் உருவாக்கம் அடிப்பட்டுப் போனதற்கும் இவரே முதன்மைக் காரணம். இத்தகைய ஒருவர் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் போன்று நீலிக் கண்ணீர் வடிப்பதை எவருமே நம்பமாட்டார்கள். கூட்டமைப்பு ...
Read More »கொட்டுமுரசு
நுண்கடன் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் மலையகப்பெண்கள்!
இன்று பல குடும்பங்களில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி விட்டிருக்கும் ஒரு திட்டமாக நுண்கடன் விளங்குகிறது. இலங்கையைப் பொறுத்தவரை சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றன. பல குடும்பப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்திலிருந்து இது வரை இந்த நுண்கடன் திட்டத்தோடு தொடர்புடைய 170 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மலையகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அரசாங்கம் கூடுதலாக பெரும்பான்மையினர் வசித்து வரும் மாவட்டங்களிலேயே தனது கவனத்தை திருப்புவதுடன் இதில் பாதிக்கப்பட்ட ...
Read More »தொடரும் மீறல்கள்!
சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு ...
Read More »நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ?
ஜனாதிபதி திகதியை தீர்மானித்து விட்ட நிலையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த தர்க்கங்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒரு சந்திப்பு. வரலாற்றுத் தர்க்கம் ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருக்கிறான். பாவத்தை செய்கின்றான் என்றால் சமூகத்தின் நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென மதகுருவும் தத்துவஞானியுமான தோமஸ் அக்கியுனஸின் கருத்தை பிரதிபலிப்பவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருமாறு வற்புறுத்துகின்றனர். அது குற்றங்களைத் தடுக்கும் என்பதே அத்தகையவர்களின் பிரதான வாதமாகவுள்ளது. மரண தண்டனை விதித்தல் குற்றங்களை குறைக்கும் அல்லது குற்றம் புரியாதவாறு குற்றவாளிகளைத் ...
Read More »சீனாவின் ‘பட்டுப் பாதை’யால் படபடக்கும் நாடுகள்!
சீனாவின் பெரிய கனவுத் திட்டமான புதிய பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. பட்டுப் பாதை திட்டத்தில் சமீபத்தில் இத்தாலி இணைந்தது. இத்திட்டத்தை சில நாடுகள் வரவேற்றபோதிலும், பல நாடுகள் படபடப்பு அடைந்திருக்கின்றன. பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, அதன் வணிகத்துக்காக உருவாக்கிய பண்டைய பாதைதான், பட்டுப் பாதை. அதேபோன்று ஒரு நவீன தடத்தை அந்நாடு உருவாக்க முயல்கிறது. அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின், ‘தி இன்வென்ஷன் ஆப் சில்க் ரோடு’ (பட்டுப் பாதை கண்டுபிடிப்பு) என்ற நூலை ...
Read More »கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்!
இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை. இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங்கள் பல. இந்திய இழுவைப் படகுகளின் வருகை, மிகப்பாரிய சேதத்தை இலங்கையின் கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் ...
Read More »ராஜீவ் காந்தி குண்டு துளைக்காத அங்கியை தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்தார்!-பண்ருட்டி எஸ்.இராமசந்திரன்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை – இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் ‘நியூஸ் டுடே” தொலைக்காட்சிக்கு ...
Read More »விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்!
தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் ...
Read More »தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்!
தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி அரசியல் ஊடாகச் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படும் அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடான காழ்ப்புணர்ச்சி கருத்துகள், சர்வதேச ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் ...
Read More »மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு?
கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். “வெற்றிபெறக் கூடிய வேட்பாளரைத் ...
Read More »