கொரோனா வைரஸ் – கொவிட் 19 என்பது உலகப் பேரிடர். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைக்கு அது தேசியப் பேரிடர். மனிதர்களில் தொற்றிப் பரவி, உயிர்களைப் பலி கொள்வதே அதன் ஒரே இலக்கு. கடந்த பத்து தினங்களுக்குள் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர்வரையிலான பொதுமக்களின் உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டிருக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் 35 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் தொற்றிப்பரவி இன்னும் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கொடிய வைரஸினால் 2 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். அதேவேளை 50 ...
Read More »கொட்டுமுரசு
சிறிலங்கா இராணுவம் பலி!
மின்னேரியா காவல் துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – ஹபரணை வீதியில் உள்ள கிரித்தலை பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பத்து பேர் பயணித்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது 8 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ...
Read More »கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் எங்கே?
கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் ஷி ஜெங்லியாக, மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார்.அந்தப் பெண்ணின் பெயர் வேண்டுமானால் ஷி ஜெங்லியாக இருக்கலாம். ஆனால் உலகம் அவரை ‘பேட் உமன்’ (வவ்வால் பெண்) என்றுதான் செல்லமாய் அழைக்கிறது. அவரை இந்த உலகமே இப்போது தேடிக்கொண்டிருக்கிறது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது இந்த வினாடி வரையில் மர்மமாகத்தான் இருக்கிறது. அவர் மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார். இந்த ‘வவ்வால் பெண்’ சாதாரண பெண் அல்ல. ...
Read More »தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி
தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி. எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் ...
Read More »பயம் – ஆதரவற்ற ஊடகவியல்! -2020 உலக ஊடக சுதந்திர தினம்
இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ;மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டுவதற்காகவும் மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திர தினமாக ஐக்கிய நாடுகளால் 1993 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று 26 ஆவது உலக ஊடக சுதந்திரத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பயம் – ஆதரவற்ற ஊடகவியல் எனும் தொனிப்பொருளில் 2020 ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடகத்துறையை ஊக்குவித்தல் எனும் ...
Read More »அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது!
மக்களை மட்டுமல்லாமல் நாட்டில் அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது. அந்தக் குதறலில் பொதுத் தேர்தலை நடத்த முடியாமல் தேர்தல் ஆணையகம் தடுமாறுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு செயற்ட வேண்டியுள்ளது. ஆகவே கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து, அவசர நிலைக்குச் சென்று மீண்டிருந்த நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமை உருவாகியிருக்கின்றது எல்லோரையும் கொன்றொழிக்கப் போகிறேன் என்று கொரோனா ...
Read More »கிம் ஜொங் – உன் எங்கே ?
வட கொரியா கிம் ஜொங் – உன்னின் ; உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் – சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day ; of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் — சுங் என்பதற்கு கொரிய மொழியில் – சூரியனாக வருவது(Becoming the Sun) ; என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய ...
Read More »வடகொரியா அதிபரின் மரண மர்மம்…….!
ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வட கொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர். உலகின் உண்மையான இரும்புத்திரை நாடு இப்போது மட்டு மல்ல, எப்போதுமே வடகொரியாதான். சீனாவிலிருந்து, கூட ரகசியங்களை கறந்துவிடலாம். ஆனால், வடகொரியாவில் காளை மாட்டிலிருந்து பால் கறந்த கதைதான்! இந்தக் குட்டி நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்களால் அறிந்துகொள்ளவே முடியாது. கொரோனா அங்கே பரவியிருக்கிறதா ; இல்லையா ...
Read More »கொரோனாவைத் தடுக்குமா பி.சி.ஜி. தடுப்பூசி?
பி.சி.ஜி. காசநோயைத் தடுப்பதற்குப் போடப்படும் பிரதான தடுப்பூசி. இது குழந்தைகளுக்கு ஏற்படும் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், மூளைக்காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும். உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி பொது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துவருவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இவை எல்லாமே ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ள விஷயங்கள். ஆனாலும், இது வயது வந்தவர்களுக்குக் காசநோய் ஏற்படுவதைத் தடுப்பதில்லை என்பது இதில் உள்ள பெருங்குறை. இந்தச் சூழலில் கரோனா நோயை பி.சி.ஜி. தடுப்பூசி தடுக்கிறது என்று சொல்வதற்கு என்ன காரணம்? ...
Read More »மக்கள் விழிப்படைந்துள்ளனர்- கொரோனா வைரஸ் குறித்து வுகான் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்
ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் 65 வயது ஹ_ அய்ஜென் தனது நகரில் புதிய கொரோhனா வைரஸ் உருவாகியுள்ளது குறித்து அறிந்தார்.அவர் அது குறித்து கவலையடையவில்லை அதுமனிதர்கள் மத்தியில் பரவாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக அவர் தனது நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன்,மாத இறுதியில் வரவுள்ள புதுவருடத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார். வுகானில் முடக்கநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அவர் நிமோனியா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனைக்காகவும், சிகிச்சைக்காகவும் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரிற்கு வைரஸ் பாதிப்புள்ளதா என்பதற்கான மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. ஆனால் மருத்துவபரிசோதனைகளின் போது ...
Read More »