கொட்டுமுரசு

பொறுப்­புக்­கூறல் முன்­னுள்ள சவால்!

யாழ்ப்­பாண நீதி­மன்­றத்தில் கடந்­த­வாரம் ஒரு வழக்கு நடந்­தது. யாழ். நகரில் பொது இடத்தில், மது­போ­தையில் குழப்பம் விளை­வித்தார் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்­பாக நிறுத்­தி­யி­ருந்­தனர் பொலிஸ் அதி­கா­ரிகள். மன்றில் நிறுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு குற்­றப்­பத்­திரம் வாசித்துக் காட்­டப்­பட்ட போது, அவர்கள் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்கள். நீதி­வானும் உட­ன­டி­யாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்­டப்­பணம் செலுத்தி விட்டுச் செல்­லுங்கள் என்று உத்­த­ர­விட்டார். இதனை விட ஒரு வலு­வான தண்­ட­னையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­க­ளான பொலிஸார் தவற விட்­டி­ருக்­கி­றார்கள். அதா­வது, ...

Read More »

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்!

மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் ...

Read More »

தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம்!

முல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற நில அப­க­ரிப்பு மற்­றும் சிங்­க­ளக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்­கான தமிழ் மக்­கள் கட்சி பேத­மின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தென அர­ச­த­லை­வர் தெரி­வித்­துள்ள நிலை­யி­லும், இந்­தப் போராட்­டம் நடந்து முடிந்­துள்­ளது. தெற்­கின் பல பிர­தே­சங்­கள் மகா­வலி கங்­கை­யின் நீரால் செழிப்­பு­டன் காணப்­ப­டு­கின்­றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்­ப­தால் மூன்­று­போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் அதிக வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்ற னர். அநு­ரா­த­புர மாவட்­டத்­தின் வறட்­சி­யான பகு­தி­கள் பச்­சைப் பசே­லெ­னக் காணப்­ப­டு­வ­தற்கு மகா­வலி நீரே ...

Read More »

ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்!

ஒகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எங்கள் சனங்கள் போராடுகின்றனர். உலகின் பல ...

Read More »

சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம்!

முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ் மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் கிளிநொச்சி நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் இவர்களைப் பிணையில் விட வேண்டும் எனக்கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவைப் பரிசீலனை செய்து, இரு ...

Read More »

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு!

இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அதை அவர் ஓரளவுக்கு வெளிப்படுத்தவும் செய்தார். எனினும், எந்தவொரு கட்டத்திலும் ...

Read More »

சீனாவின் பட்டுப்பாதையில் ஆழமாக புதைந்து போன தென்னிலங்கை!

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல நாடுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளில் சீன திட்டங்கள் மிகவும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி திட்டங்களானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது. அவ்வாறான ஒன்று தான் அம்பாந்தோட்டை துறைமுக திட்டமாகும். பல நாடுகளில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படை தன்மையை காண்பிக்கும் வகையிலும் சீனா தற்போது செயற்பட தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் , சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின்,கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தென் ...

Read More »

பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.   படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள். ”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். ...

Read More »

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? நிலாந்தன்

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் ;மின்னல் என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...

Read More »

அன்பின் பேருரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

இந்திய சுதந்திர தேவியின் சிலையை எத்தனையோ சிற்பிகள் வடித்தனர். அந்தச் சிலையின் கண்களைத் திறந்தவர் நேதாஜி. இந்தியா எப்படி விடுதலைப் பெறவேண்டும் என்ற தீர்க் கமானப் பார்வையுடன் தன் ஐசிஎஸ் பதவியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்துக்குள் குதித்தார். “வாள் கொண்டு போரிடுபவனுக்கு வாள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும், ரத்தம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்துடன் ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார். அரண்மனைப் போன்ற வீடும், வீடு நிறைய வேலையாட் களும் பாரம்பரிய செல்வாக்கும் நிரம்பிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஜானகிநாத் – பிரபாவதி தம்பதியின் 14 ...

Read More »