இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறுபத் தொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, தன்னிகரற்ற தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி முறைமை பல துறைகளிலும் பலவீனமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவதானிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி, சுபீட்சம் மிகுந்ததாக ...
Read More »கொட்டுமுரசு
வடகடலில் சீனர்கள்?
வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது. வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு ...
Read More »சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
சீனாவில் உள்ள 56 இனக்குழுக்களை குறிக்கும் வண்ணம், பீரங்கி குண்டுகளை 56 தடவைகள் முழங்கி, 9 நினைவு நாணயங்களை வெளியிட்டு, வானத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கொடியைப் பறக்க விட்டு, 100 என்று காணும் விதமாக ஜெட் விமானங்கள் பறக்க, வான்அதிரும் மேளங்களுடனும் துள்ளல் இசையுடனும், தியானமென் சதுக்கமே அதிரும் வண்ணம், 9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு நகரங்களில் ஒலிஒளி நிகழ்ச்சிகளை கட்சியினர் நடத்துகின்றனர். A mass gala celebrating the 100th anniversary. Getty ...
Read More »கதைசொல்லி சஞ்சய்!
ஒரு கலைஞர் தன்னுடைய கலையின் மூலமாக ரசிகர்களுடன் பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்தக் கலையின் பல சிறப்பான அம்சங்கள் அந்தக் கலைஞரிடம் ஏதோ ஒரே நாளில் வந்தடைந்த கண்கட்டு வித்தை அல்ல. அதற்குப் பின்னால் நிறைய வலிகள் இருக்கும்… கோபங்கள் இருக்கும்… பயிற்சிகள் இருக்கும்… அவமானங்கள் இருக்கும்… எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்… ஏக்கங்கள் இருக்கும். ‘கலைப் பயணத்தில் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவருக்கான இந்த இடம் எப்படிக் கிடைத்தது?’ என்பதில் இருக்கும் சுவாரஸ்யங்களை ஒரு கலைஞரே தன்னுடைய ரசிகருக்குச் சொல்வது அலாதியான ...
Read More »சீனாவின் நூறு பூக்கள்
எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது. முன் கதை ...
Read More »மேதகு-வரலாறு எனது வழிகாட்டி
எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal).இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் ...
Read More »“ஈழ அகதிகளை இரண்டு விதமான அணுகுமுறைகளில் கையாளுகிறார்கள்!” அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினி
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, சர்வதேச நாடுகள் ஈழத் தமிழ் அகதிகளைக் கையாளும் விதம், சி.ஏ.ஏ விவகாரம், முகாம்வாழ் ஈழத் தமிழ் மக்களின் நிலை என அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்… “இலங்கையில் போர் ஓய்ந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அங்கு வாழ்வதற்குரிய சரியான சூழல் இப்போதும் உருவாகவில்லை. இன்னமும் தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அன்றாடப் பாட்டுக்கே தமிழ் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் முன்பைப் போல வாழ்வுரிமையும் கிடைப்பதில்லை. இப்போது ...
Read More »பொசன் நாடகம்?
கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் கடந்த12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ...
Read More »வீரப்பன்: வெளிவராத பக்கங்கள்!- சிவசுப்பிரமணியம் பேட்டி
சந்தனக் கடத்தல் வீரப்பனைக் காட்டில் சந்தித்து நிறைய நேர்காணல்கள் செய்தவர் பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம். கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கடத்தப்பட்டபோது, வீரப்பனுடன் பேச்சு நடத்திய அனுபவம் கொண்ட இவர், வீரப்பன் வழக்குகளில் தொடர்புபடுத்தப்பட்டு சிறைக்கும் சென்றவர். என்கவுன்ட்டரில் வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து, ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக நூலை எழுதி சமீபத்தில் வெளியிட்டார். சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூலைத் தற்போது ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இது ...
Read More »பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ?
அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் ...
Read More »