கொட்டுமுரசு

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம்!

அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான். நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை என்றிருக்கும் நிலையில், இலங்கையின் அரசியலுக்கு ...

Read More »

சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார்! – ஹிஹ்புல்லாஹ்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா  நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து  விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள    நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,   அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு: கேள்வி:- ...

Read More »

கோடி அற்­புதர் அந்­தோ­னி­யாரின் கோலாகலமற்ற திரு­விழா!

இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10  மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும்  ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ்  மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள். கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா…? இல்லை… நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும்  திரு­விழா இது. புனித அந்­தோ­னியார்…!  அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ்­டங்கள்  எல்­லாமே சூரி­யனைக் ...

Read More »

சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா?

யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் – மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டியோ”? மற்றவரின் பதில், குண்டு வெடித்தது போல ...

Read More »

உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள்!

தேர்தல் என்று வந்தால் உங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள் என்று. அப்­போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்­ட­மாற்­றாகக் கோரியே கொடைகள் தரப்­பட்­டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அர­சியல் திருத்­தச்­சட்­டத்தில் உள்ள  அதி­காரப் பகிர்வு வடக்­குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனா­தி­பதி இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அண்­மையில் கூறி­யுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்­மா­னிப்­பது அவர் அல்ல. எமது மக்­களே! அவரைப் பத­விக்குக் கொண்­டு­வர நாங்கள் 2014இல்,  2015இல் பாடு­பட்­டது அவர் எங்­க­ளுடன் சேர்ந்து பேசி எமது ...

Read More »

முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு ; என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் ...

Read More »

சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்!

திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி  அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம்  என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லா தெரி­வித்தார். ...

Read More »

மோடியின் முதல் பயணமும் இலக்கும்!

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார். ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது. சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது. அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கும் நிகழ்வு, கடந்த ...

Read More »

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்!

அரசியலுக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நாமெல்லோரும் நீண்டகாலமாகவே பேசிவந்திருக்கின்றோம். இலங்கை அண்மைய சில தசாப்தங்களாக எதிர்நோக்கிவருகின்ற எரியும் பிரச்சினைகளில் இது முக்கியமான ஒன்று. ஆனால், அரசியலில் இருந்து குற்றச்செயல்களையோ அல்லது குற்றச்செயல்களில் இருந்து அரசியலையோ விடுவிக்க எம்மால் எதையும் செய்யமுடியவில்லை. தொடர்ந்து அதைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க மாத்திரமே எம்மால் முடிகிறது. குறிப்பாக, எமது பிராந்திய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்று முடியும்போதெல்லாம் ‘ மக்கள் பிரதிநிதிகள் ‘ என்று தெரிவுசெய்யப்படுகின்றவர்களின் பின்னணி பற்றி பேசுவது வழக்கமாகும். பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேர் மக்கள் பிரதிநிதிகள் ...

Read More »

மூடிய அறையில் இரகசிய வாக்குமூலமளித்த நாலக்க!

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை நாடாளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது. இவ் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வா வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந்தார். அவருடனான விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு ...

Read More »