முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து ...
Read More »கொட்டுமுரசு
தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மாநிலக் கட்சிகள் தோன்றினாலும், டெல்லியில், காங்கிரஸ், பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லும் ...
Read More »ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு…..?
இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 31/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டுக்குப் பாதகமாக அமையக் கூடிய மேலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை , தேசிய நல்லிணக்கத்தின் மீது தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டிருப்பதை வெளிக்காட்டக் கூடியதாக மாற்று பயணத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இது தொடர்பாக ...
Read More »அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும்!
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசியற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படுத்தி ...
Read More »தமிழைக் காத்த தமிழ் தாத்தா!
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார். இன்று (பிப்ரவரி 19-ந் திகதி) தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் பிறந்த நாள். தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் கொண்டு வந்தார். பிற்காலத்தில் தமிழின் தூதுவராக இருந்து சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்து ‘தமிழ் தாத்தா’ என்று பட்டப்பெயர் பெற்றார். ...
Read More »ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து!
பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு ...
Read More »‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் ...
Read More »யாழ். வரலாற்றைச் சொல்ல ஓர் அருங்காட்சியகம்!
நேற்றைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவும், நாளைய சமூகத்திற்குச் அதனைச் சொல்லவும் அருங்காட்சியகங்கள் உதவுகின்றன. ஒரு நாட்டை அல்லது இனத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சார்ந்து அமைக்கப் பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்குள் போனாலே போதும் , அவர்கள் பற்றிய பலதை வாசித்தறிந்து கொள்ளலாம் என்கிறார் ஒரு வரலாற்றுப் பேராசிரியர். ஒரு நாட்டின் அதுவும் குறிப்பாக ஒரு இனத்தின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகங்களின் பணி மிகவும் முக்கியமானது. அதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்களும், அதனை உணர்ந்தவர்களும் அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த ...
Read More »இளைஞர்களின் பெரும் சக்தி!
அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றியும்கூட. இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவருக்குப் பக்கபலமாக ஒரு இளைஞர் கூட்டமே படுதீவிரமாகப் பணியாற்றியிருக்கிறது. கேஜ்ரிவால் கலந்துகொண்ட ஒவ்வொரு கூட்டத்தையும் ஒருங்கிணைத்தவர் அஸ்வதி முரளிதரன். கேஜ்ரிவாலுடன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் கைகோத்த பிரித்வி ரெட்டி இன்னும் அவர் கூடவே பயணிக்கிறார். தேர்தல் நன்கொடைகள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு இரண்டையும் ப்ரித்வி ரெட்டி கவனித்துக்கொண்டார். ஆஆகவின் ஊடகத் தொடர்புகளுக்கான மேலாளராக இருந்த ஜாஸ்மின் ஷா, தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். பொருளாதாரத்துக்காக நோபல் ...
Read More »வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்!
பரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளைக் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக ...
Read More »