சிறப்பு செய்திகள்

“எனக்கு அப்பாவும் இல்லை…. அவர் போட்ட கடிதமும் இல்லை” !

வகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாணவர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏரத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர். இந்த மாணவர்களின் இயல்புகளாலும் கல்வி நிலையினாலும் வகுப்பறைக்குச் சென்றதும் முதலில் இவர்களை தேடுவது வழக்கமாக கொண்டிருப்பேன். அப்படித்தான் அன்றைக்கு அந்த மாணவியை விசாரித்தேன். “அவள் பிறசர் கிளினிக்குக்கு போயிட்டாள் சேர்” என்றாள் இன்னொரு மாணவி. நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவளின் அழுத்தம் நிறைந்த பேச்சும் பார்வையும் திடீர் திடீர் என கலங்கும் கண்களும் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள்! -கண்ணீர் விட்டழுத பசீர் காக்கா

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா. இது தொடர்பாக காக்கா அண்ணா உள்ளிட்டவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் அங்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர்கள் தெரிவித்ததாவது, தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு) , முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் திருமலை) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமையைச் ...

Read More »

இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும் நிலத்துக்கான போராட்டமும்!

 பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து 1992ஆம் ஆண்டில், முழங்காவிலுக்கு அருகில் காணப்படும் இரணைமாதா நகருக்குச் சென்று, இறுதியில் அங்கு, தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். ...

Read More »

புலனாய்வாளர்களின் இறுக்கமான கண்காணிப்பின் கீழேயே ஊடகப் பணி!

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. அதேவேளை, யுத்தத்தின் பின்னர் நிலைமாறு கால நீதி பற்றி பேசப்படுகின்ற சூழலில் இது போதிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் முன்னைய ஆண்டிலும் பார்க்க சிறிது முன்னேறியிருக்கின்றது என்பதை ஆர்.எஸ்.எவ் என்ற அமைப்பு, அகில உலகளாவிய தனது ஊடக சுதந்திர நிலைமை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத் ...

Read More »

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதாவது நமது மனதின் நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் கண்ணாடி தான் நமது முகம். ஒருவர் சந்தோஷமாக இருந்தால், அவரது முகம் மலர்ச்சியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புன்னகை நிறைந்ததாக இருக்கும். அதுபோல் அவர் சோகமாக இருந்தால் அவரது முகம் ‘களை இழந்து’ சோகத்தை வெளிப்படுத்துவதாக காட்சியளிக்கும். பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் ...

Read More »

“புரட்சித் தலைவன்” சே.. விதைக்கப்பட்டு 50 வருடங்கள் !

தலை குனிந்து வாழ்வதை விட தலை நிமிர்ந்து செத்துப்போவது மேல் என்று முழங்கிய புரட்சியாளரான சே குவேரா மரணமடைந்து 50வது ஆண்டு நிறைவடைந்து விட்டன. இதனை குறிக்கும் வகையில் கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர் ஒவ்வொரு புரட்சியும் ஒரு நாள் அடங்கும். ஒவ்வொரு போராட்டமும் ஒரு நாள் முடியும். ஆனால் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் முடிவே கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் ...

Read More »

மாமனிதர் மருத்துவர் பொன். சத்தியநாதனின் இறுதி வணக்க நிகழ்வு!

தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ...

Read More »

ஸ்மார்ட்போனின் போனில் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பலவித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்திக் கொடுக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடைபெறுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பற்றாளர் பொன். சத்தியநாதன் என்ற பெருமனிதன் மறைவு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார். இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு வள்ளுவமே தமிழரின் மதமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டு தான் செல்லும் வீடுகளுக்கு வள்ளுவரின் ...

Read More »

மொபைல் வன்முறை – தவிப்பது எப்படி?

முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். இணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். தொடர்ந்து அதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் உங்களுக்கு சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்களிடம் புகார் செய்ய வேண்டும். அதன் பிறகும் அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும். சில ...

Read More »