ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பலவித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்திக் கொடுக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடைபெறுகிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இது எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் பின்கோடு கொண்டோ அல்லது மற்ற வழிகளிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் லாக் செய்வது மிகவும் அவசியம். இதனால் நமது தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி காக்க முடியும். தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன்களில் கைரேகையை கொண்டு லாக் செய்யும் அம்சமும் வழங்கப்படுகின்றது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், அதன் பயன்பாட்டை முன்னோக்கி எடுத்து செல்பவர்களும் ஸ்மார்ட் போன் பிரச்சினைகளை சரிசெய்யவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும், பாதுகாப்பு விரிசல்களை சரிசெய்யவும் என்று பல விதங்களில் முயற்சி செய்து மென்பொருள் அப்டேட் வழங்குகின்றனர். போனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
பொது வைபை நெட்வொர்க்குகளை பயன்படுத்துவது மலிவுதான். ஆனால் அவை பெரிய அளவில் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் வைபை நெட்வொர்க்கை யாரேனும் கண்காணிக்கக் கூடும். நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை அவர்களால் கண்காணிக்க முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் அபாயமும் உள்ளது.
ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பலவித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்திக் கொடுக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கான கடவுச்சொல்லை அவ்வப்போது பயன்படுத்தி போனை லாக் செய்து தகவல்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.