சிறப்பு செய்திகள்

அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும்!

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியலுக்கும் எதேச்சதிகாரத்திற்கும் வழிசமைத்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ...

Read More »

முள்ளிவாய்கால் நிகழ்வு சில சிங்களவர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது!

என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? பதில்- உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் ...

Read More »

‘பலாத்காரத்துக்கு அர்த்தமென்ன என்று என் மகள் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது’: கௌதம் கம்பீர்

நாட்டில் குழந்தைகள் மீதான பலாத்காரம் அதிகரித்துள்ளதற்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, பலாத்காரம் என்றால் என்னப்பா என்று என் மகள் என்னிடம் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னால் கேப்டனான கௌதம் கம்பீர் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ”பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை நாளேடுகளில் அது குறித்த செய்திகள் பார்க்கும் போது அச்சமாக ...

Read More »

தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?

அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில்,  2008ஆம் ஆண்டு, ...

Read More »

இருமுகத்தோற்றம்!

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட தின­மா­கிய மே 18 ஆம் நாள் நாட்­டை­ அ­ர­சியல் உணர்வு ரீதி­யாக இரு துரு­வங்­க­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. இன ஐக்­கி­யத்­திற்கும் அமைதி–சமா­தா­னத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட யுத்த முடிவு தின­மா­னது அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றத் தவ­றி­விட்­டது. அந்த  தினம் நேர் முர­ணான இரு முகத்­தோற்­றங்களைக் கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டின் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் அது யுத்த வெற்றி தின­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. ஆனால் வடக்­கிலும்–கிழக்­கிலும் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களிலுள்ள தமிழ் மக்கள் மனங்­க­ளிலும் அந்த தினம் ஆழ்ந்த துய­ரத்தைத் தரும் ஒரு ...

Read More »

ஊற்றுப்புலத்தில் உருக்குலைக்கப்படும் தமிழர் வரலாற்று எச்சங்கள்!!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில், அதனை அழிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனரா என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்று எச்சங்கள் காணப்படும் காட்டுக்குள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் மாலை வேளைகளில் சென்று வருவதனை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். அத்தோடு கடந்த செவ்வாய்க்கிழமை (22) இராணுவ அதிகாரிகள் சகிதம் ஒரு குழுவினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று அவதானித்த ...

Read More »

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25!

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் (International Missing Children’s Day) எனும் இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1979-ம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் ...

Read More »

சிந்துதாய்! பெயரிலேயே தாய் கொண்டுள்ள இவர் நிஜமாகவே உலக தாய்!

இன்று இரண்டு குழந்தை பெற்று வளர்க்க கஷ்டப்பட்டுக்கொண்டு ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறார்கள் நவநாகரீக பெற்றோர். அதிகரித்து வரும் இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த இதுவொரு நல்ல வழி தான் என்றாலும். மறுபுறம் இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது இன்றைய பொருளாதார சூழலில் மிகவும் கடினம் என்றும் பலர் கருதுகிறார்கள். இன்றைய சூழலில் எல்.கே.ஜி சேர்கவே ஓரிரு இலட்சங்கள் செலவு ஆகிறது. ஆனால், நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை ஒற்றை பெண்மணியாக நின்று பிச்சை எடுத்து வளர்த்து அவர்களை பெரிய ஆட்களாக ஆளாக்கி அழகு ...

Read More »

நினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்!

நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான் நீ’ என்கிற அடிதடி மோதல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. கடந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்து, இம்முறை அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு, நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான ...

Read More »

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் பலவீனம் ...

Read More »