சிறப்பு செய்திகள்

சரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன!

வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார். மேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் ...

Read More »

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா: முக்கியத்துவமும் சவால்களும்!

அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ?டெய்லி மிரர்? நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: *நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். *கடல் பாதைகளில் ...

Read More »

“காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது“!

இவான் துர்கனேவ் ‘காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது. காதலின் முன் வாழ்வின் வரையறைகள் அர்த்தமற்றவை. வேறெந்த உணர்ச்சிகளுக்கும் பொருளில்லை. காதல், வாழ்வின் ஓர் அங்கமல்ல; காதலே வாழ்வின் முழுமை. நிராகரிப்பின் உச்சத்திலும் அவமானத்தின் கீழ்மையிலும்கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்!’ இவான் துர்கனேவின் வாழ்க்கையில் இருந்து காதலை மேற்சொன்னவாறு புரிந்துகொள்ளலாம். உலக இலக்கியத்தின் எந்தப் பக்கத்திலும் துர்கனேவைப் போலொரு கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாது. எழுதப்பட்டிருந்தாலும் ஏற்கமுடியாத பாத்திரமாக துர்கனேவ் இருந்திருப்பார். காதல் தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ள விரும்பினால் நிச்சயம் இவான் துர்கனேவ் பெயரையே ...

Read More »

பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர்!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் தன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர். நீட் தேர்வில் கிடைத்த வெறும் 39 மதிப்பெண்கள், அவரை நிலைகுலையச் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளடங்கி அமைந்திருக்கிறது பெருவளூர் ஊராட்சி. சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்ட சற்று பெரிய ஊர். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல ஊரும் காலனியும் தனித்தனியே இருக்கும் இந்த ஊரில் ஒரு எளிய ஆதிதிராவிட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரதீபா. கடந்த ஜூன் ...

Read More »

நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள்!

உங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க். ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. ...

Read More »

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்!

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதையும் தமிழ்த்தேசிய நோக்கு ...

Read More »

மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவு!

எனக்கு 63 வயதாகிறது. 2011-ல் எனக்கு மாரடைப்பு வந்தது. மூன்று அடைப்புகள் இருந்தன. இரண்டு ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன. பீட்டாலாக், நெக்சியம், டுனாக்ட் இஇசட் எனும் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை. உணவு முறையில் மட்டும் அவ்வப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. மாரடைப்புக்குப் பிறகான உணவு முறையைத் தெளிவுபடுத்தினால், என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். – எஸ். பாலகிருஷ்ணன், பள்ளிக்கரணை, சென்னை. மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மாரடைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் ...

Read More »

தருமு சிவராம்: காலம் நமக்கு அருளிய கொடை!

கேரளாவில் 1975-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்த ஒரு அகில இந்தியக் கவிதைப் பட்டறையில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பும் வழியில்தான் முதன்முறையாக சிவராம் மதுரை வந்தார். அவரை ரயில் நிலையத்தில் சந்தித்து, அழைத்துச்சென்று குமாரசாமியின் பெரியநாயகி அச்சகம் மாடி அறையில் தங்கவைத்தேன். அவ்வப்போது பல்கலைக்கழகம் போய் வந்துகொண்டிருந்ததைத் தவிர பிற நேரங்களில் முடிந்தவரை அவருடன்தான் இருந்தேன். மேதமையில் மிளிரும் உடல்மொழியும் பேச்சுமொழியும் கொண்டவர். எடுத்த எடுப்பிலேயே ஒருமையில்தான் உறவாடினார். சுந்தர ராமசாமியை உத்வேகத்தின் உள்ளார்ந்த அமைதி என்று கொண்டால், தருமு சிவராமை உத்வேகத்தின் எக்காளம் என்று ...

Read More »

மூன்று ‘உ’க்களைக் கடைப்பிடித்தால் 100 வருடம் குறையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்!

டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்… “ `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ...

Read More »

‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்!

எத்தனை கோயில்களுக்குப் போனாலும், எவ்வளவு பரிகாரம் செய்தாலும் தூத்துக்குடி பாவத்தை எடப்பாடி பழனிசாமியால் துடைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கும் தான் இது. மே 22-ம் நாள் தமிழ்நாட்டுக்குக் கண்ணீர் நாளாகவே இருந்து தொலையட்டும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் கறுப்புநாள். இந்தச் சாவுப்பூதம் இறுதிவரை உங்களை நிம்மதியாக இருக்க விடாது. அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளை நீங்கள் ...

Read More »