செய்திமுரசு

சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம்

இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுடன், ...

Read More »

ஈராக்கில் பரபரப்பு – பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்  தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஈராக் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ...

Read More »

ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளில் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொவிட் -19 வைரஸால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் . தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு அப்பால் தற்போது காற்றின் மூலமும் இத்தொற்று பரவுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமல்ல இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. ...

Read More »

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் ; உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல் ...

Read More »

தமிமீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக ...

Read More »

ரஞ்சித் ஆண்டகை குரலை  உயர்த்த வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ; குரல் எழுப்பிவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் ஆண்டகையின் குரலை  உயர்த்த வேண்டும். ஆனால்  யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் ; தெரிவித்தார். தமிழ் இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுமளவுக்கு நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைதுகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் ...

Read More »

சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு

பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன. தற்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை ...

Read More »

சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட‌ன. இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம் கொண்டவை என சீனா கடுமையாக விமர்சித்தது. மேலும் இந்த விவகாரம் ஆஸ்திரேலியா சீனா இடையிலான உறவை மோசமாக்கியது. இந்த நிலையில் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு ...

Read More »

இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் – எய்ம்ஸ் மருத்துவர்கள்

இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பிடியில் சிக்கி வருகின்றனர். இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் எந்த எந்த அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என  எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...

Read More »