செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் விபத்தில் மரணம்!

அவுஸ்திரேலியா- விக்டோரியாவின் Geelong பகுதியைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து அண்மையில் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் பின்னணி கொண்ட 38 வயதான நிக்சன் என்பவரே கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான நிக்சன் Geelong-இல் குடும்பத்துடன் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முழுக்குடும்பமும் நிக்சனின் வருமானத்தில் தங்கி வாழ்ந்ததாகவும் திடீரென இவர் மரணமடைந்துள்ளதால் குடும்பத்தினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் ...

Read More »

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா,  ‘லங்காதீப’ விடம் பேசியுள்ளார்.   சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது. ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் ...

Read More »

ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியாகவில்லை- அமெரிக்கா மறுப்பு

ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது. ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான ...

Read More »

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று நிலைமையானது அதிகரிக்கக் கூடும். இதனைக் கருத்திற்கொண்டு நளாந்த நடைமுறை வாழ்க்கை முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். இதனைத் தவறும் பட்சத்தில் அண்டை நாடான இந்தியாவைப் போன்ற ஒரு சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.   கொரோனா தொற்றாளர் ஒருவர் வீட்டில் அடையாளம் ...

Read More »

வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். இதேவேளை, வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ...

Read More »

புத்தர் சிலை உடைப்பு – கைது

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்  சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக காவல் துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் காங்கேசன்துறை காவல் துறையின் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Read More »

ஃப்ரான்ஸுவா குரோ: மரணத்தைப் போல நிலைத்திருப்பார்

பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் 1933-ல் பிறந்த ஃப்ரான்ஸுவா குரோ (1933-2021) தன் இளம் வயதிலேயே இந்தியவியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். லுய் துய்மோன், லெ ருவா குரோன், ழான் ஃபிலியோஸா முதலான அறிஞர்களிடம் பெற்ற பயிற்சி அதைச் செம்மைப்படுத்தியது. சிலகாலம் அல்ஜீரியாவுக்குக் கட்டாய ராணுவ சேவைக்காக அனுப்பப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கல்வி கற்பதை நோக்கித் திரும்பிய குரோ இந்தி, சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். புதுச்சேரியில் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டில் அப்போதைய இயக்குனராக இருந்த ழான் ஃபிலியோஸாவால் ...

Read More »

12 – 15 வயதினருக்கு கரோனா தடுப்பு மருந்தை அளிக்கக் காத்திருக்கும் பைஸர் – பயோடெக்

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் பைஸர் – பயோடெக் நிறுவனம் கோரியுள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை பைஸர்- பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் நிறுவனங்கள் 2,000 இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி சோதனை நடத்தியது. இதில் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த சோதனை முடிவை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாளர்கள் அமைப்பிடம் வழங்கியுள்ளோம். எங்கள் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள் ...

Read More »

இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 5 ஆண்டு சிறை, அபராதம்: ஆஸி. பிரதமர் மோரிஸன் அதிரடி

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இங்கிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களால் கரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. இருப்பினும், வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் அளவு ...

Read More »

முதல்வராகிறார் ஸ்டாலின்: திமுக கூட்டணி அமோக வெற்றி

2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் திமுக எழுச்சியைப் பெற்ற ஆண்டு என்றால் அது 1971ஆம் ஆண்டு திமுக பெற்ற வெற்றிதான். திமுக 1967இல் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் அண்ணா பொறுப்பேற்ற ஓராண்டிலேயே மறைய, கருணாநிதி முதல்வர் ஆனார். காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இரண்டாகப் பிளவுபட, தமிழகத்தில் போட்டியில்லா நிலையில் எம்ஜிஆர், கருணாநிதி எனும் ...

Read More »