செய்திமுரசு

சிங்கள மக்களை ஏமாற்றி தீர்வு காணலாம் என யாரும் நம்பகூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களை ஏமாற்றியோ சிங்கள மக்களை ஏமாற்றியோ தமிழ்மக்களுக்கு ஒரு அமைதியான நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். மாறாக வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலமே அரசியல் ரீதியான விடயங்கள் அணுகப்படவேண்டும் என தமிழத்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வழங்கும்போதே அவர் தனது கருத்தை தெரிவித்தார். இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் தொட்டே உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் அனைத்துலக மக்கள் அவைகளும் நாடு கடந்த ...

Read More »

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் – ச.பா.நிர்மானுசன்

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல்.

Read More »

“மாற்றத்தைப்” பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு – நிலாந்தன்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகபட்சம் ...

Read More »

இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல்! வெளிவரும் பல உண்மைகள்!!

இலண்டனில் மட்டுமல்;ல கொழும்பில் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தைகள் செய்துவருகின்றேன். இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அனுமதி இன்றி எத்தகைய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. மேலும் சர்வதேச விசாரணை என்பது நிறைவடைந்துவிட்டது. அதற்கான அறிக்கை வரும்போது என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என்ற நிலைவரும். இருக்கின்ற சட்டங்களின் ஊடாக அவற்றை அணுகமுடியாமல் போகலாம். அதனால் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டிவரும். அதனாலேதான் உள்ளக விசாரணையை அல்ல உள்ளக பொறிமுறை வேண்டும் என்கின்றேன். நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பானவராக ...

Read More »

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது பயன்படுத்தலாம்தான். ஆனால், அவற்றை முன்னெடுக்க செயல்திறன் கொண்ட மக்கள் எம்வசம் இல்லை. இந்த 5, 6 வருடங்களுக்குள் எமது மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்து, தற்போது சடத்துவ நிலையில் நடமாடுகிறார்கள்” என்கிறார் கலாநிதி சிதம்பரநாதன். யுத்தம் நிறைவடைந்து ...

Read More »

அகதிப்படகுகளை திருப்பி அனுப்புவதற்கு காசு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!!

நியுசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதி தஞ்சம் கோரிவந்தவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவதற்கு படகை செலுத்தி வந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது பங்களாதேஸ் இலங்கை மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து அகதி தஞ்சம் கோரிவந்த 65 பேரை கொண்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்துள்ளார்கள். இடைமறிக்கப்பட்டு அனைவரும் கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது போன்று வைத்திருந்துள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கே பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டு மனிதாபிமான முறைகளை மீறி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உள்ளுர் காவற்றுறை அதிகாரி ...

Read More »

இலண்டன் இரகசிய சந்திப்பு ஏன் – சுமந்திரன் சுரேந்திரன் ரமணன் விளக்கம் (காணொளி)

இரகசியமாக தயார்படுத்தப்பட்ட லண்டன் சந்திப்பு பற்றிய செய்தி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் அதுபற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த சந்திப்பு பற்றி தமிழ்த்தொலைகாட்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலகத்தமிழர் பேரவை பேச்சாளர் சுரேந்திரன் நோர்வே ஈழத்தமிழர் அவையைச் சேர்ந்த ரமணன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர். தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய உடனடி தேவைகள் என்பது பற்றி கலந்துரையாடவே இலண்டன் சந்திப்புக்கு இரகசியமாக வந்தோம். நடைபெற்ற சந்திப்பில் தமிழ்மக்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் ...

Read More »

முடியிழந்த மரங்கள் – பாலமுருகன் திருநாவுக்கரசு

புங்குடுதீவில் நடந்த கொடூரமும் தொடர்ந்து நடைபெற்ற நில சம்பவங்களும் எமக்கு பல செய்திகளை சொல்லி நிற்கிறது. இங்கு நான் பதிவிடுவது , நானறிந்த நான்கைந்து சம்பவங்களினை மட்டுமே. இதன் தொகுப்பும் முடிவும் உங்களுடையது. 1) புங்குடுதீவு கொடூரத்தையும் அதை ஒத்த அண்மைய சமூகநெறிப்பிறழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அநேகர் ( இளைஞர்கள்) போதைக்கு அடிமையானவர்களே என்பது நடக்கின்ற விசாரணைகளில் இருந்து தெரிகிறது. 2) யாழ்மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் ( முக்கியாமய் பாடசாலைகளுக்கு அருகில் ) பலதடவை ஆதாரத்துடன் பொலிஸுக்கு ...

Read More »

ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்

ஒஸ்ரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் தனக்கு விரும்பியபடி மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரிய அனைத்து மக்களும் தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக உள்ளனர் . இது தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அகதிகள் விண்ணப்பப் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (28-05 – 2015) நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப் பட்டன . அகதிகள் சட்டம் தொடர்பாக கடமைபுரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கலந்துகொண்டு இருந்தார் . அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தற்போது நடைமுறையில் ...

Read More »

தேனீர் கொடுத்தபின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை – சந்திரகாந்தன் வாக்குமூலம்

முன்னாள் சிறிலங்கா சனாதிபதி மகிந்த இராஜபக்சவின் உறுதிப்படுத்தலின் பின்னர் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலுடன் சரணடையவந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேனீர் வழங்கப்பட்டு இருக்கவைக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றிய அனைத்து விடயங்களும் ஐக்கிய நாடுகள் உட்பட முக்கியமான நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் ...

Read More »