ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்

ஒஸ்ரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் தனக்கு விரும்பியபடி மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரிய அனைத்து மக்களும் தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக உள்ளனர் .

இது தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அகதிகள் விண்ணப்பப் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (28-05 – 2015) நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப் பட்டன .

அகதிகள் சட்டம் தொடர்பாக கடமைபுரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கலந்துகொண்டு இருந்தார் .

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்தியில் பாரிய சவாலை ஏற்ப்படுத்தியுள்ளது எனவும் ஒருமுறைதான் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார் .

எனவே முதலாவது விண்ணப்பம் குடிவரவு திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டால் மிகவும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார் .

தற்போது உள்ள சட்டத்தின் பிரகாரம் ஒரே ஒரு வாய்ப்பு மாத்திரமே வழங்கப்படும் எனவும் தவறும் பட்சத்தில் தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அகதிகள் செயற்பாட்டளர்களான பால விக்கினேஸ்வரன் மற்றும் சுயன் செல்வன் தெரிவிக்கையில்

தற்போது வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துவதை தவிர்த்து நடக்கும்படியும் தெரிவித்தனர் .

இது போன்ற காரணங்களால் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

refugee-visa-meeting (9)

 

refugee-visa-meeting (2)

refugee-visa-meeting (6)