இலண்டன் இரகசிய சந்திப்பு ஏன் – சுமந்திரன் சுரேந்திரன் ரமணன் விளக்கம் (காணொளி)

இரகசியமாக தயார்படுத்தப்பட்ட லண்டன் சந்திப்பு பற்றிய செய்தி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் அதுபற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை உள்ளது.

இந்த சந்திப்பு பற்றி தமிழ்த்தொலைகாட்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலகத்தமிழர் பேரவை பேச்சாளர் சுரேந்திரன் நோர்வே ஈழத்தமிழர் அவையைச் சேர்ந்த ரமணன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய உடனடி தேவைகள் என்பது பற்றி கலந்துரையாடவே இலண்டன் சந்திப்புக்கு இரகசியமாக வந்தோம். நடைபெற்ற சந்திப்பில் தமிழ்மக்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் பொறிமுறை பற்றியே பேசியதாக சுமந்திரன் தெரிவித்தார்.இலங்கைத்தீவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து புலம்பெயர்தமிழர்கள் செயற்படவேண்டும் என தான் விரும்புவதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் போர்க்குற்றம் பற்றியோ எமது அரசியல் தீர்வு பற்றியோ உள்ளக விசாரணை பற்றியோ விவாதிக்கப்படவில்லை எனவும் உலகத்தமிழர் பேரவையானது தமிழர்களுக்கான தீர்வு என்பது பேசித்தான் தீர்க்கப்படவேண்டும் என்பதே தனது கொள்கையாக கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். எனவே அதுபற்றி பயப்படவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் சுரேந்திரன் தெரிவித்தார்.

சிங்கப்புர் பேச்சுவார்த்தையிலும் நாங்கள் மூன்று பேரும் பங்குகொண்டோம். அங்கு எதிர்காலத்தில் இலங்கைக்கு எத்தகைய அரசியல் யாப்பை கொண்டுவரலாம் என்பது பற்றி கலந்துரையாடியிருந்தோம்.
இனிமேல் நடைபெறும் சந்திப்புகளில் காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு காலவரையறையுடன் பேசவேண்டும் என கேட்கவிருக்கின்றோம்  என மருத்துவர் ரமணன் தெரிவித்தார்.