செய்திமுரசு

மனுஸ் தீவு அகதிகள் பப்புவா நியுகினி முகாம்களுக்கு செல்ல மறுப்பு!

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி இன்றுடன் மூடப்படவுள்ளது. ஆனால் அங்குள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது. பப்புவா நியுகினியிலேயே நவுறு ...

Read More »

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படக் கூடியது. இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்வதை போன்ற ஆக்ரோஷம் அப்போட்டித் தொடரில் இருக்கும். ஒரு ஆண்டு இங்கிலாந்திலும் மற்றொரு ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடர் நடப்பது வழக்கம். முதல் டெஸ்ட் போட்டி இவ்வாண்டுக்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Read More »

சிறிலங்கா வரும் அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இன்று ரெல் அவிவ் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல் சந்தித்துப் பேசவுள்ளார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல், பாதுகாப்பு ...

Read More »

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனம் மீதான அவதூறு வழக்கு!

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார். அவுஸ்ரேலியா செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது. பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு உலக கோப்பையின் போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கு கெய்ல் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் ...

Read More »

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று (30) முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப் பட்டுள்ளன.   அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ...

Read More »

கொழும்பிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை !

கொழும்பிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவையின் நேடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளைக் கொண்ட ஏ-330 ரக வானூர்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Read More »

சிறுநீரக கோளாறு குறித்து ஆராய இலங்கை வரும் அவுஸ்ரேலியாவின் குழு

நாட்டில் காணப்படும் சிறுநீரக கோளாறு தொடர்பில் ஆராய அவுஸ்ரேலியாவின் விஷேட வைத்தியக் குழுவினர் வருகைதரவுள்ளனர். ஜனாதிபதியின் அழைப்பிற்கு இணங்க, இவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக, சிறுநீரக நோய்த் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்ட பணிப்பாளர் அசேல இந்தவல சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஷஸ் தொடர் குறித்து வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எதிரணியின் பலவீனத்தை சுற்றிக்காட்டி ஒவ்வொரு வீரர்களும் கூறிவருகிறார்கள். இதற்கு தக்க பதிலடியும் கொடுப்பார்கள். தற்போது இந்த தொடருக்கான விவாதம் சூடுபிடித்துள்ளது. ...

Read More »

பெண்கள் கிரிக்கெட்: அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் வெற்றி

ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. அரைசதம் அடித்த பியூமோன்ட் இங்கிலாந்து அணி கேப்டன் ஹெதர் நைட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 8 ...

Read More »

சிரியா: போரினால் பசிக்கொடுமை – தவிக்கும் பிள்ளைகள்!

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சிரியாவின் அரசாங்கப் படைகள் டமாஸ்கசின் கிழக்கிலுள்ள புறநகர்ப் பகுதியை முற்றுகையிட்டன. அங்குள்ள பகுதியில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பற்றாக்குறையால் பிள்ளைகளே ஆக அதிகமாக அவதிப்படுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் பிள்ளைகளின் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தகவல்கள் கூறின. கிழக்கு கவுட்டா பகுதியில் குறைந்தது 1,200 பிள்ளைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 1,500 பிள்ளைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று UNICEF அமைப்பு தெரிவித்தது.

Read More »