செய்திமுரசு

கொவிட்-19: தடுப்பு மருந்துகளைக் காட்சிப்படுத்தியது சீனா!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக கடந்த 6 ஆம் திகதி சீனா காட்சிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினோவக் பயோடெக் (Sinovac Biotech LTD) மற்றும் சினோபார்ம்(Sinopharm) ஆகிய இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள குறித்த மருந்துகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் குறித்த மருந்துகளின் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமென உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை ...

Read More »

திறன்வாய்ந்த வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு

ஆஸ்திரேலியாவின் முக்கியமான துறைகளில் பணியாற்ற அவசரமாக  தேவைப்படும்  திறன்வாய்ந்த  வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க  ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் Priority Migration Skilled Occupation List (PMSOL)  பட்டியலின் கீழ்,  சுகாதாரத்துறை,  இயந்திரம்,  கட்டுமானம்  மற்றும்  தகவல்  தொழில் நுட்பத்துறையில்  உள்ள  திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு  ஆஸ்திரேலியாவுக்குள்  நுழைய  இதன் மூலம்  முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. Priority Migration Skilled Occupation List Chief Executive or Managing Director Construction Project Manager Mechanical Engineer General Practitioner Resident Medical Officer Psychiatrist Medical Practitioner nec Midwife Registered Nurse (Aged Care) Registered Nurse (Critical Care and ...

Read More »

2-வது போட்டியிலும் ஆஸி. ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 158 இலக்கை 4 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டி தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. வார்னர் ரன்ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் ...

Read More »

20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை ...

Read More »

7 நாட்களுக்குள் 20 ஆவது திருத்தத்தை உச்ச நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்!

விருப்பு வாக்குமுறைமையினை இரத்து செய்து பொருத்தமான தேர்தல் முறைமையினை அறிமுகம்செய்யுமாறு ;புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான ; பேர் அடங்கிய குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20வது திருத்த ; வரை புநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ; 7 ; நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியும் என காணி விவகார அமைச்சர். எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார். ;புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ;அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் ; ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தீக்குளித்த அகதி மனநலம் பாதிக்கபட்டவரா?

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி தீக்குளிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசகரை சந்திக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரது கோரிக்கை தீக்குளிக்கும் நாள் வரை பரிசீலீக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Omid Masoumali எனும் 24வயது அகதி, நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பார்வையிட வந்த ஐ.நா. அதிகாரிகளின் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 57 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இவர் முதலில் நவுருத்தீவு மருத்துவமனைக்கு ...

Read More »

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச்  சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்கமாக முடிவெடுத்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் அந்த ...

Read More »

ஹிந்தி_தெரியாது_போடா…

இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று   இந்தியாவில் தேசிய அளவில் டிரெண்டானது. இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து ...

Read More »

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் – இந்திய கிரிக்கெட் அணியில் 25 வீரர்கள் இடம் பெற வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் 25 வீரர்கள் இடம் பெற கூடும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி ...

Read More »

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் . பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காளைப் பழைய சிறைச்சாலை பயன்படுத்தப் படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 1982 ஆண்டு இலக்கம் 10யின் கீழான பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தைத் தடுக்கும் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் ...

Read More »