ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் 25 வீரர்கள் இடம் பெற கூடும் என கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி வைக்க கூடும் என கூறப்படுகிறது.
இதற்காக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல கூடும். மற்ற வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்டு அணியில் இணைந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal