7 நாட்களுக்குள் 20 ஆவது திருத்தத்தை உச்ச நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்!

விருப்பு வாக்குமுறைமையினை இரத்து செய்து பொருத்தமான தேர்தல் முறைமையினை அறிமுகம்செய்யுமாறு ;புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான ; பேர் அடங்கிய குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20வது திருத்த ; வரை புநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ; 7 ; நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியும் என காணி விவகார அமைச்சர். எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.

;புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

;அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 19வது திருத்தம் ; இரத்த செய்து நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என மக்களுக்கு வாக்குறுதி 20வது திருத்தம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய அரசியமைப்பு உருவாககத்திற்கு ;மூன்றில் இரண்டு பெரும்பான்மை ; பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே ; 20வது திருத்தத்தை ;நிறைவேற்ற எதிர் தரப்பினரது ஆதரவு அவசியமில்லை

;20வது திருத்த சட்ட மூல வரைபு வர்த்தமாயில் வெளியிடப்பட்டுள்ளது. ;சட்டமூல வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 7 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும்   வரைபினை ; உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். எவ்வித ; தடைகளுமின்றி ;20வது திருத்தத்தை நிறைவேற்றுவோம்.

நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு ; முறைமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ;பொருத்தமற்ற ஒரு தேர்தல் முறைமையாக காணப்படுகிறது. தேர்தல் முறைமையில் ;மாற்றம் ;ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை எதிர் ;தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே புதிய அரசியலமைப்பில் ; நாட்டுக்கு பொருந்தும் வகையில் ;தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும்.

முரண்பாடற்ற , நாட்டுக்கு பொருந்தும் தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துமாறு புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயும் ; 9பேர் அடங்கிய குழுவினரிடம் ; கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகம் செய்த தேர்தல் திருத்த முறைமையிலான  அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது என்றார்..