20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் ஏற்கனவே எங்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
Eelamurasu Australia Online News Portal