செய்திமுரசு

சுமணரதன தேரருக்கு தமிழில் வந்த நீதிமன்ற உத்தரவு

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம். அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா? ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 ...

Read More »

மெல்பர்ன் நகரில் திட்டமிட்டதற்கு முன்பாகவே, கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் பரிசீலனை

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் திட்டமிட்டதற்கு முன்பாகவே, கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்துவருகின்றனர். சனிக்கிழமை 26ஆம் தேதியிலிருந்து அவை நடப்புக்கு வரலாம் என்று விக்டோரியா மாநில ஆளுநர் தெரிவித்தார். கடந்த 2 வாரங்களில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியாவோரின் சராசரி எண்ணிக்கை 30ஆகக் குறைந்திருப்பதை அவர் சுட்டினார். ஆஸ்திரேலியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப் பரவல் அதிகரித்தபோது, மெல்பர்ன் நகரே அதிகம் பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் இரண்டாம் தேதியிலிருந்து, அந்த நகரில் கடுமையான முடக்கநிலை நடப்பில் உள்ளது.

Read More »

திட்டமிட்டபடி நாளை முழுநாள் உண்ணாவிரதப் போராட்டம்

திலீபனின் நினைவு தினமான நாளை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல நாளை காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என யாழ். நகரில் இன்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்த தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், இந்தப் போராட்டம் எந்த இடத்தில் நடத்தப்படும் என்பதை நாளை காலை போராட்டம் ஆரம்பமான பின்னர்தான் வெளியிடுவோம் எனத் தெரிவித்தார். தமிழ்த் ...

Read More »

சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகம் முற்றுகை

சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பு இன்று நண்பகல் ஈழத் தமிழ் மக்களின் உரிமை கேட்டு கண்டனம் தெரிவிக்க சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன், அவைத் தலைவர் வில்லியப்பன், மார்ல துணைப் பொதுச்செயலாளர் பசீர், பச்சை தமிழகம் கட்சி அருள் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Read More »

உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டத்தரணி சுகாஸ் இதனைதெரிவித்துள்ளார். மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இசையால் என்றென்றும் வாழ்வார்… எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ...

Read More »

சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை

தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு ...

Read More »

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More »

தியாகி திலீபனின் தீர்ப்புக்காக யாழில் மக்கள் காத்திருப்பு

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இன்று மீண்டும் கூடி நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். திலீபன் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில் அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் ...

Read More »

20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ ...

Read More »