செய்திமுரசு

ஐந்து மணி நேரம் சாட்சியமளித்த ரணில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணித்தியால சாட்சியளிப்பின் பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.

Read More »

 இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மற்றும் ஊடகவியலாளர் குமணன் ஆகியோர் மீதே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் ...

Read More »

நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்

வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது, அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிவசமாக பேசி மக்களைப் பார்த்து கண்கலங்கினார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ராணுவ அணி வகுப்பின்போது ஹவாசோங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா. இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது ...

Read More »

ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்!

0 மைத்திரி, ரணில் அதிகாரிகள் ஆளுக்காள் அதிரடி குற்றச்சாட்டு 0 ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது 0 பேராயருக்கும் சந்தேகம்! கடும் போக்காளர்கள் அரசு மீது சீற்றம் 0 ஹக்கீம், ரிஷார்ட் வந்தால் உதைத்து விரட்டியடித்து விடுவோம்; – ஒரு எச்சரிக்கை 0 அரசு ஆடைகள் அணிந்து கொண்டா மக்கள் முன் நிற்கின்றது? – பிக்கு கேள்வி மனித வாழ்வு மிகவும் விநோதமனது. அவர்களின் சிலரது வாழ்வு துயரங்கள் நிறைந்து. இன்னும் சிலரது வாழ்வு செல்வச் செழிப்பானது. இன்னும் சிலரது ...

Read More »

முல்லைத்தீவில் தனியார் ஊடக பிராந்திய செய்தியாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தனியார் ஊடகம் ஒன்றின் பிராந்திய செய்தி யாளரான சண்முகம் தவசீலன் என்பவரே தாக்குதலுக்கு ஆளாகி யுள்ளார். அத்துடன், இவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் கே.குமணன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read More »

ஆஸிபிரதமர் வாகனம் மீது போலி இரத்தம்! -பின் கதவால் தப்பிச் சென்ற பிரதமர்

அவுஸ்திரேலியாவில் அகதிகளின் காலவரையறையற்ற தடுப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அமைப்பினர் இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகக்கவசங்களுடன் சென்று அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிரதமரின் கார் உட்பட அவர் சமூகமளித்திருந்த மண்டபம் எனக் கருதப்படும் இடத்திற்கு தக்காளி மற்றும் இரத்தம்போன்று தயாரிக்கப்பட்ட சிவப்புச்சாயத்தையும் எறிந்து சேதம் விளைவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தினால் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை பதற்றம் நிலவியது. பல்கலைக்கழக மண்டபங்கள் இழுத்து மூடப்பட்டன. அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அவரது பாதுகாப்பு ...

Read More »

வடகொரியாவின் கண்டங்களுக்கு இடையிலான மிகப்பெரிய ஏவுகணை

வடகொரியா மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை தனது இராணுவஅணிவகுப்பில் காட்சிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலைக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவஅணிவகுப்பில் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் வடகொரியா தனது மிகவும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை காட்சிப்படுத்தியுள்ளது. இரண்டுவருடங்களுக்கு பின்னர் வடகொரியா முதல்முறையாக தனது நீண்;ட தூர ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ளது. வடகொரியா இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை செயற்பாட்டிற்கு வந்தால் உலகின் தரைவழியாக நகர்த்தக்கூடிய உலகின மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையாக அது காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை ஒரு இராட்சசன் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடகொரியா ...

Read More »

20 க்கு எதிரான எமது நிலைப்பாடு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் தொடரும்!

“அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் நான்கு பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் முதன்மைச் சரத்துக்களை மீறுகின்றன எனவும், அவை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் நடைமுறைக்குக்கொண்டுவர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் நாங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.” ...

Read More »

பிக்குவின் தலைமையில் திருகோணமலையில் நில அபகரிப்பு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மையப்புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர் . கடந்த மாதம் 24 ஆம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை ...

Read More »

பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா”

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கொத்தணி சமூகத்துக்குள் இறங்கியதனால் 1050 க்கும் மேற்பட்டோர் ஒரு சில தினங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களானதுடன் இலங்கையின் 16 மாவட்டங்கள் கொரோனாவின் ஆட்சிக்குள் வந்துள்ள போதும் கடந்த வார பாராளுமன்ற அமர்வுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளன. பாராளுமன்ற அமர்வுகளுக்கு கொரோனாவினால் தடை ஏற்படாதபோதும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரச,எதிர்க்கட்சியினரிடையில் சபையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கொரோனாவின் தாக்கம் பாராளுமன்றத்திலும் வெளிப்பட்டது. முதல் நாள் அமர்வான செவ்வாய்க்கிழமையே கொரோனா கொத்தணியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்குமென எதிர்பார்க்கப்பட்டபோதும் அன்றைய நாள் ...

Read More »