முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தனியார் ஊடகம் ஒன்றின் பிராந்திய செய்தி யாளரான சண்முகம் தவசீலன் என்பவரே தாக்குதலுக்கு ஆளாகி யுள்ளார். அத்துடன், இவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் கே.குமணன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
Eelamurasu Australia Online News Portal