செய்திமுரசு

கொவிட்-19: இவ் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி தயாராகும் -ஃபைசர் நிறுவனம்

இந்த ஆண்டின்  இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்கிட முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் (Pfizer) தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிகல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்து, அரசின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி தடுப்பூசி மருந்துகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் தலைமை செயற்பாட்டு  அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம், தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகவும், வரும் மார்ச்  மாதத்திற்குள் 10 கோடிமருந்துகைள ...

Read More »

பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளைசிறிலங்கா நிறைவேற்றவேண்டும்

இலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார். நட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தியாவிற்கும் இங்கும் சுற்றுப்பயணம மேற்கொண்டுள்ளேன் இனி மாலைதீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் செல்லப்போகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக நாடுகள் சுதந்திரமான ...

Read More »

இலங்கையில் 35,000 பேர் சுய தனிமைப்படுத்தலில்

இலங்கையில் தற்போது 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சமூகத்தில் தொற்றுநோய் விரைவாகப் பரவுவதால் பொது மக்கள் தீர்க்கமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக் கிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.   நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டில் வைத்தியசாலையில் நோயாளர்கள் நிறைந்துள்ளதாக மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித் துள்ளார்.

Read More »

சீனா சிறிலங்காவுக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது

சீனா சிறிலங்காவுக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகி;ன்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

Read More »

இராட்சத சுறாக்கள் உலாவுவதை அறியாமல் நீச்சலில் ஈடுபட்ட மக்கள்!

அவுஸ்திரேலியாவில் இராட்சத சுறாக்கள் அருகே உலாவுவதை அறியாமல், பிரம்மாண்ட மீன் திரளுக்கு நடுவே பொதுமக்கள் சிலர் நீச்சலடித்த வீடியோவொன்று வெளியாகியுள்ளது.   சிட்னியிலுள்ள போண்டி கடற்கரையோரம், சால்மன் வகை மீன்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்த நிலையில், அவற்றுடன் சிலர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது மீன்களை உண்பதற்கான 2 சுறாக்களும் அந்த பகுதியில் உலாவியதை ட்ரோன் கெமரா படம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடப்பாண்டில்  மாத்திரம் இதுவரை  21 சுறா தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.            

Read More »

மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 000 ஆண்டுகளுக்கு முன்னர் மாயன் நாகரிகத்தினர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நீர் சுத்திகரிப்பு மையமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   குவாதமாலா நாட்டிலுள்ள மாயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், அவர்கள் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அதில், கிறிஸ்டல் கற்கள், படிக மணல், சுண்ணாம்புக் கல் ஆகியவை கொண்டு நீர் சுத்திகரிப்பு செய்தது தெரியவந்தது. இம் முறை தற்போதைய காலத்திற்கும் ஏற்றவண்ணம் இருந்தது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More »

தனியார்துறை ஊழியர் சம்பளம் தொடர்பாக அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட் – 19 தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ...

Read More »

ரிசாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி விரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.

Read More »

’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்

கடந்த ஒரு தாசாப்தங்களுக்கும் மேலாக நாம் நாட்டில் நடந்த தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை தேர்தல் நடப்பதற்குப் பல வாரங்கள் முன்பே துள்ளியமாக சொல்லி வந்திருக்கின்றோம். அதே போன்று 20 தொடர்பான நீதி மன்றத்துக்கு ஓரிரு வழக்குகள் பதிவாகிக் கொண்டிருந்த நேரத்திலே இந்த வழக்குகள் ஆளும் தரப்புக்கு வாய்பாக அமையும் என்றும் அதில் சொல்லி இருந்தோம். அதே நேரம் கடந்த வாரம் எழுதி இருந்த கட்டுரையில் சிலர் 20 க்கு சர்வசன வாக்கெடுப்பு என்று பேசிய போது, இல்லை சில திருத்தங்களை விலக்கல்களைச் செய்து கொண்டால் ...

Read More »

’20’ ஐ ஆதரித்தவர்களை ஹம்கீமும், ரிஷாத்தும் வெளியேற்ற வேண்டும்

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20 இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு ...

Read More »