செய்திமுரசு

போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னதாக கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களாவர். இந்த சூழலில், அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த பொழுது ஒரே அடியில் வீழ்த்தும் ...

Read More »

படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 150 குடியேற்றவாசிகள் பலி

செனெகல் கடற்பகுதியில் அகதிகள் குடியேற்றவாசிகளின் படகொன்று தீப்பிடித்து நீரில் மூழ்கியதில் 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே கடலில் உயிரிழந்துள்ளனர். படகு தீப்பிடித்ததன் காரணமாக இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பிடித்த படகில் 200க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 60 பேரை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். செனெகலின் வடமேற்கு செயின் லூயிஸ் கடற்பகுதியிலிருந்து புறப்பட்ட படகே விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் கனரி தீவுவின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்றவர்களே பலியாகியுள்ளனர். இந்த வருடம் ...

Read More »

கெஹெலிய ஊடகங்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன?

கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங் கியது அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்ப் பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார். அதற்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு அனை த்து ஊடக நிறுவனங்களிடமும் ஊடகப்பேச்சாளரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ஊடக வியலாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில் கொவிட்- 19 கொரோனா தொற்றின் போது மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய சில நிவாரணங்களைச் சங்கத்தின் பிரதிநிதி கள் நினைவு கூர்ந்தனர், மேலும் ...

Read More »

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் உணவை கூட பெறமுடியாத அவலம்!

தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான பணம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றது என ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பணியாற்றும் தபிந்து கலக்டிவ் அமைப்பின் சமிலா துசாரி தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சிலரிற்கு ...

Read More »

கடன் பொறியா? இராஜதந்திர பொறியா?

அக்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு, ஒரு புதிய இப்டோ (Indo -Pacific Treaty Organization -IPTO) ஆக தோற்றம் பெறுமா? என்பதே நமது சந்தேகம். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்ட குவாட் உரையாடலில், சீனாவின் பொருளாதார- இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது. சீனாவை எப்படி மடக்குவது? என்பதாக அந்த உரையாடல் வெளி விரிந்துள்ளது. அக்டோபர் 9 ...

Read More »

பூமிக்கு அடியில் புதிய அணு உலையை கட்டுகிறது ஈரான்

அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ...

Read More »

சபாநாயகர் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு கையெடுத்திட்டார் – இன்று முதல் சட்டமாகிறது!

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டத்திற்கு சபா நாய கர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டார். அதன்படி, இன்று முதல் 20ஆவது திருத்தம் சட்டமாக மாறும் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது

Read More »

களுத்துறையின் அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டன

களுத்துறையின் அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டுள்ளன. மத்துகம நியுகொலனியில் விதிக்கப்பட்டிருந்த கொரோன வைரஸ் ஊரடங்கினை நீக்கியுள்ள அதிகாரிகள் களுத்துறையின் ஏனைய பகுதிகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர்.

Read More »

மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை கேட்டுகொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது மைக்பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்பை தனது தெரிவித்துள்ளதாவது இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தி;ன் கீழ் உடன்படமறுப்பதற்கான விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலும் தளமும் குறைவடைகின்றது. நியுயோர்க் டைம்சி;ன் பத்திரிகையாளர் தர்சா பஸ்டியன் துன்புறுத்தப்படும் சம்பவம்,புளொக் பதிவாளர் ரம்சி ராசீக் தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்டமை,ஹெஜாஜ் ஹிஸ்புல்லா ...

Read More »

சிட்னி செல்லவிருந்த விமானத்திலிருந்து பெண் பயணிகளை இறக்கி உடல் பரிசோதனை!

தோஹா விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாயைத் தேடும் பொருட்டு, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை நடத்தியமைக்கு அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2ஆம் திகதி தோஹா விமான நிலையக் கழிப்பறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்லவிருந்த விமானத்திலிருந்து பெண் பயணிகளை இறக்கி, அவர்களில் யாருக்கேனும் அன்று குழந்தை பிறந்ததா என உடல் பரிசோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கத்தார் பிரதமர் ...

Read More »