படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 150 குடியேற்றவாசிகள் பலி

செனெகல் கடற்பகுதியில் அகதிகள் குடியேற்றவாசிகளின் படகொன்று தீப்பிடித்து நீரில் மூழ்கியதில் 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே கடலில் உயிரிழந்துள்ளனர்.

படகு தீப்பிடித்ததன் காரணமாக இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பிடித்த படகில் 200க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 60 பேரை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். செனெகலின் வடமேற்கு செயின் லூயிஸ் கடற்பகுதியிலிருந்து புறப்பட்ட படகே விபத்தில் சிக்கியுள்ளது.

ஸ்பெயின் கனரி தீவுவின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்றவர்களே பலியாகியுள்ளனர்.

இந்த வருடம் இடம்பெற்ற மிகமோசமான சம்பவம் இது என ஐநா தெரிவித்துள்ளது.