செய்திமுரசு

பிரேஸிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட நபர்!

பிரேஸிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.   பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ(Diogo Rabelo )என்பவருக்கும் விட்டர் புவெனோ (Vitor Bueno) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவிலுள்ள ஒரு ...

Read More »

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம்

வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மீரிகம சுகாதார வைத்தியர் தெரிவித்துள்ளார். மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 68 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்து விட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். ...

Read More »

வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான முகமது சஹ்ரான் ஹஸிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை மருத்துவமனைக்கு இன்று அதிரடிப்படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாத்திமா கொழும்பு ரிமாண்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை குறைந்தது 30 கைதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள். அவர்களில் சஹ்ரான் ஹசிமின் மனைவி உட்பட ...

Read More »

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா?

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்ஹலே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார். “சிங்ஹலே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை ...

Read More »

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும்

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமடைவது ஏன் என கேள்வி வைரமுத்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது/இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடையார் என்பது ஆளுநருக்கே தெரியும் ...

Read More »

மீண்டும் நியூசிலாந்தின் பிரதமரானார் ஜெசிந்தா!

நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern ) 2ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக்கொண்டார்.

Read More »

துல்லியமான தரவின்றி கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவது கடினம்

பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த முடிவுகளை வெளியிட இப்போது எடுக்கப்படும் 48 மணி நேர காலத்தை நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்தனர். சரியான தரவு வெளியிடப்படும் வரை வைரஸை திறம்பட கட்டுப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என மருத்துவர் செனால் பெர்னாண்டோ கூறினார். சீரற்ற(Random) பி.சி.ஆர் சோதனைகள் சிவப்பு வலயப் பகுதிகளில் ...

Read More »

‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலைவர்கள் இப்போது ...

Read More »

யாழ்.கரவெட்டியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா

யாழ். கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் ...

Read More »

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை முன்னரே கணித்த பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்றும், அம்முடிவுகளுக்கு ட்ரம்ப் எவ்வாறு நடந்து கொள்வார் என்றும் முன்னரே கணித்த ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட செனட்டர் பெர்னி சாண்டர்ஸின் நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ...

Read More »