செய்திமுரசு

ஆஸ்ரேலியா பிரிஷ்பனில் இடம்பெற்ற மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரை லெப்ரினன்ற் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ...

Read More »

புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது!

இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு உதவாது என்பதை மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தீர்ப்புகள் ஊடாக நீதிமன்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது என்ன நாடோ? என்ன சட்டமோ? வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதியில், இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை சூழ்ந்து நிற்கையில், 1989 நவம்பர் 27ம் நாளன்று மாவீரர் நாள் பிரகடனமானது. 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் ...

Read More »

முள்ளிவாய்க்காலில் ஊடவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Read More »

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளிட்டோர் மாவீரன் லெப்.சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

Read More »

ஆஸ்திரேலியா: Orphan Relative விசா: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கென பல விசா பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று Orphan Relative விசா(subclass 117) ஆகும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் என்பதைப் பார்ப்போம். ஏனைய ஆஸ்திரேலியா விசா பிரிவுகளைப் போலவே Orphan Relative விசாவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் மாத்திரமே இவ்விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெறுவர். இதன்படி வெளிநாடு ஒன்றில் பிறந்த குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், அல்லது காணாமல்போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால், அந்தக் குழந்தை ...

Read More »

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. ...

Read More »

கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை நேற்று முன்தினம் (24) கனடாவில் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னைப் பார்க்கின்றேன். “இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை ...

Read More »

மாவீரர் தின தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் (26), குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று, கிளிநொச்சி நீதிமன்றத்தில், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால், 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் ...

Read More »