செய்திமுரசு

12 புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வெளியானது

நாட்டில் ​கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. அதடினப்படையில்.. ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும். வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும். ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் ...

Read More »

மரணச் சடங்கு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒருவர் மரணித்தால 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் 19 அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டுமென சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே ;கலந்துகொள்ள முடியுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை: வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகள் ஆஸ்திரேலியாவில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் பயணிகள் நுழைவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழிகளும் தற்போது அடைக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் பரவல் இந்தியாவில் பெருகி வரும் நிலையில், வரும் மே 15ம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதனால் பயணிகள் பலர் கட்டார், சிங்கப்பூர், மலேசியா ...

Read More »

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் (89) கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். சந்திரா தோமர் 60 வயதுக்கு பிறகு தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். மூத்தோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார். அவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ...

Read More »

இரத்த சரித்திரத்தில் கிடைத்த 8 மணி நேர வேலை உரிமை

உலகம் முழுவதும் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னால் அமெரிக்க தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வரலாறு. உலக தொழிலாளர்களின் உரிமைக் குரலாக கம்யூனிஸ்ட் கொள்கைகள் வளர்த்து எடுக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கைகள் தொழில்புரட்சியில் முன்னிலை வகித்த அமெரிக்காவிலும் பரவிக் கொண்டிருந்தன. 1880 ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் செயல்பட்ட தொழிலாளர் இயக்கங்களை ஒருங்கிணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்கிற இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கம், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி ...

Read More »

தீவிரகிசிச்சைபிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன

மருத்துவமனைகளின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் நெருக்கடி நிலை காணப்படுகின்றது என அரசதாதிமார் அலுவலக சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளிற்கான தேவை அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இ;ந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அரசாங்கம் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளை அனுமதித்துள்ளதாக தெரிவித்தாலும் 18 படுக்கைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மேல்மாகாணத்தில் நாளாந்தம் 900 கொரோனாவைரஸ் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் தீவிரகிசி;ச்சை ...

Read More »

அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……?

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் நியமனம் குறித்த சட்டவலுவும் கூட கடுமயான சட்டரீதியான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு நாட்டில் நிலவுகின்ற ஜனநாயக ஆட்சிமுறையின் அதிகார வலுவேறாக்கல், நீதித்துறையின் சுதந்திரச் செயற்பாடு, சட்டமா அதிபரின் பக்கம் ...

Read More »

4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா

கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த இசை விருது விழா நடைபெற உள்ளதாம். இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது ...

Read More »

தாய்லாந்தில் முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்

நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ...

Read More »