இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை: வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகள்

ஆஸ்திரேலியாவில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் பயணிகள் நுழைவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழிகளும் தற்போது அடைக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் பரவல் இந்தியாவில் பெருகி வரும் நிலையில், வரும் மே 15ம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதனால் பயணிகள் பலர் கட்டார், சிங்கப்பூர், மலேசியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு நுழைய முயற்சிக்கின்றனர்.

கத்தார் ஏர்வேஸ் தங்களின் விமானச் சேவை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்த நிலையில், கத்தார் ஏர்வேஸூடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் வேறு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.