செய்திமுரசு

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதனை அம்பலப்படுத்தியுள்ளார். ...

Read More »

கைதுசெய்யப்படுவதைத் தவிர்க்க இரு ஆஸ்திரேலியச் செய்தியாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றம்

சீனக் காவல்துறையினர் விசாரிக்க முற்பட்டதால் இரு ஆஸ்திரேலியச் செய்தியாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் பணியாற்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெய்ச்சிங்கில் பணிபுரிந்த பில் பர்ட்டல்ஸும் (Bill Birtles) ஷங்ஹாயில் பணிபுரிந்த மைக்கல் ஸ்மித்தும் (Micheal Smith) ஆஸ்திரேலிய அரசதந்திர அலுவலகங்களில் சில நாள்கள் தஞ்சமடைந்த பிறகே நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். சென்றவாரம் நள்ளிரவில் பர்ட்டல்ஸின் வசிப்பிடத்திற்குச் சீனக் காவல்துறை அதிகாரிகள் சென்று, அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினர். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அவரை விசாரிக்க விரும்புவதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பர்ட்டல்ஸ் ...

Read More »

ஜமால் கஷோகி கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனையை ரத்து

ஜமால் கஷோகி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த ...

Read More »

20 ஆவது திருத்தத சட்டம் – பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தது என்ன?

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித் துள்ளார். ஜனாதிபதியை நீதிமன்றத்தில் சந்தித்து கேள்வி கேட்க 20 ஆவது திருத்தச் சட்டம் தடுத்துள்ளது என்றும் அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல என்றும், ஜனாதிபதி யாக இருந்தபோதிலும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்பட்டால் அவருக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.   இந்தச் சட்டத்தால் தணிக்கையாளர் ஜெனரலின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் சில அரசு நிறுவனங்களைத் ...

Read More »

20வது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும்

20வது திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தேர்தல்வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என தேர்தல்வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளகஜநாயக்க தெரிவித்துள்ளார். 20வது திருத்தம் நகல்வடிவிலேயே உள்ளதால் மேலதிக பிரிவுகளை இணைக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின் நகல்வடிவில் உள்ள விடயங்கள் தேர்தல்கள் ...

Read More »

விமானத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா? கொரோனாவுக்கு சவால் விடும் அதிநவீன தொழில்நுட்பம்

விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் ...

Read More »

புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள் !

படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 1958இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் புலிகளை பயங்கரவாத இயக்கம் என தரப்படுத்தியிருக்கின்றனர். நீங்கள் அவர்கள் பயங்கரவாதிகள் ...

Read More »

கரோனா சிகிச்சையில் புதிய வெளிச்சம்

எட்டு மாதங்களாக உலகையே முடக்கிப்போட்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து நாளொரு செய்தியும் பொழுதொரு வியப்பூட்டும் அறிவியல் உண்மையும் வெளிப்படுகின்றன. மூக்கு, தொண்டை, நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோய் எனும் அளவில்தான் ஆரம்பத்தில் கரோனா அறியப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவத் தொடங்கிய சில மாதங்களிலேயே அது இதயம், ரத்தக்குழாய், சிறுநீரகம், குடல் உள்ளிட்ட பலதரப்பட்ட உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடியது என்பது தெரிந்தது. இதுபோல், கரோனா தொற்றாளரின் திடீர் மரணத்துக்கு அவர் உடலில் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனும் தடுப்பாற்றல் மிகைநிலை உருவாகி, கடுமையான மூச்சுத் திணறலுக்கு வழிகொடுப்பதுதான் ...

Read More »

சஜித்தின் இணைப்புச் செயலாளராக உமா நியமனம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ், இன்றைய தினம் (8)) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Read More »

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களின்மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ; க.பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் ...

Read More »