செய்திமுரசு

ஈழத்தமிழர் மெல்பனில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது  

Read More »

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது

இலங்கை இந்திய உடன்படிக்கை இலங்கை இந்திய உடன்படிக்கை என்னும் அனைத்துலக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 34ஆவது ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இலங்கை தனது தேசிய நெருக்கடிகளின் பொழுது இந்தியாவிடம் முதலில் உதவி கோரியதன் பின்னரே அது அனைத்துலக நாடுகளிடம் உதவி கோரலாம் என்பதை வலியுறுத்தியே இந்த உடன்படிக்கை அந்நேரத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது. 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் ...

Read More »

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்

அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும் என மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.12 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ஆகலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் அந்தோணி பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ...

Read More »

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு அனுமதி

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார். இதனால் இந்த வருட ஆலய உற்சவத்தினை சிறப்பாக நட த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More »

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள கிளிநொச்சி காவல் துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலத்திற்கு உரியவர் போர் காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Read More »

குயின்ஸ்லாந்தில் 16 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 199 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 199 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 111 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 50 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் ...

Read More »

‘சீனாவின் அடிமை நாடாக இலங்கை மாற நேரிடும்‘

வெளிநாடுகளிடம் இருந்து  பெறப்படும்  கடன்களால் சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாக இலங்கை மாற வேண்டிய நிலை ஏற்படும்  என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தில்நேற்று(3) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது”  இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் செலுத்தி  வந்த நாம் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம். ஏதாவது ஒரு சர்வதேசக் கடனை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றிய வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ...

Read More »

கருணாவை கைது செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார் அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள வர்களுக்கு எதிராக ...

Read More »

குரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்

உலகமே குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறையை ஒன்றுபட்டுஎதிர்த்துக் கொண்டிருக்கும்போது, மிக வளர்ந்த நாடு என்று சொல்லப்படும்அமெரிக்காவில் அதுவும் விளையாட்டுத்துறையில் இத்தனை காலமாக நடந்துவந்த குழந்தை பாலியல் வன்புணர்வுகள் மீண்டும் வெளிச்ச வட்டத்துக்கு வந்துள்ளன. தனது இளம் பிராயத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி எடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு, தங்கப் பதக்கங்களை வாங்கி குவித்த ஆப்ரிக்க-அமெரிக்க வீராங்கனையான சிமோன் பைல்ஸ், கடந்த புதன்கிழமை அன்று ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு காரணம் தனது மன நல பிரச்சினைகள்தான் என்று அவர் ...

Read More »