கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட ...
Read More »செய்திமுரசு
20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் இம்ரான் கான்!
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று பதவியேற்ற நிலையில் 20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அவர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நேற்று பதவியேற்றார். ...
Read More »மீள் குடியேறியுள்ள முள்ளிக்குள மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் அதிகாரிகள்!
மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ...
Read More »இழந்து விட்ட அரசியல் ஓர்மம்!
தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் ...
Read More »7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஜந்து இலட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நூற்றியேழு சதுரமீற்றர் பரப்பளவில் (597,107) இருந்து ஏழாயிரத்து நூற்று ...
Read More »ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும்!
நடைமுறையில் காணப்படுகின்ற மாகாண சட்ட திட்டங்கள் ஊடாக செயற்பட்டால் மாத்திரமே ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும். எனவே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களை ஒத்திவைக்கும் நிலைப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஜனவரி 5 ஆம் திகதி 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் அறிவித்தல் விடுத்திருந்தது. ஆனால் தேர்தல் முறைமை குறித்து அறிவிக்கப்படாத நிலையில் கட்சி ...
Read More »ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற இஸ்ரேல் பிரதமர்!
ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டுக்கு இன்று சென்ற காவல் துறையினர் அவரிடம் 12-வது முறையாக விசாரணை நடத்தினர். யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என காவல் ...
Read More »இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ...
Read More »வாஜ்பாய்: மாற்றாரும் நேசித்த தாமரை!
இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னிகரற்றவர். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், பெரிய மக்கள் தலைவர். இளமைக் காலம் பள்ளிக்கூட ஆசிரியர் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் – கிருஷ்ணா தேவிக்கு 1924, டிசம்பர் 25 அன்று குவாலியரில் புதல்வராகப் பிறந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். சகோதர, சகோதரிகள் உண்டு. பூர்விகம் உத்தர பிரதேசத்தின் பாதேஷ்வர் என்றாலும் தாத்தா பண்டிட் ஷியாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு இடம்பெயர்ந்துவிட்டது வாஜ்பாய் குடும்பம். சரஸ்வதி ...
Read More »முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்கா இரங்கல்!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ...
Read More »