Home / செய்திமுரசு (page 770)

செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் தியாகதீபம் திலீபன் நினைவுப்பாடல்

தியாகி திலீபன் நினைவு பாடல் ஒன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் கலை பண்பாட்டுக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  

Read More »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக வழங்கப்படவுள்ளது. விளம்பர ...

Read More »

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக ...

Read More »

ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்

360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிட்சை  செய்ய உள்ளார். இதனால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி ...

Read More »

‘எழுக தமிழ்’ ஒரு வரலாற்றுப் பதிவு! அனைவருக்கும் எமது நன்றிகள்!

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தது, ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், ...

Read More »

நாடு திரும்பும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 20,000 டொலர்

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக தமது தாய் நாடு ...

Read More »

ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் ...

Read More »

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை

உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று(27) கையொப்பமானது. கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் ‘பார்க்’ (FARC) அமைப்பு 1964-ம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறது. தென்அமெரிக்காவின் வடமுனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய ...

Read More »

கானமழை 2016 நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. Date: Saturday, Oct 01, 2016, 6:00 pm. Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448

Read More »

தியாகி திலீபனின் நினைவு நாள் – 2016

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்த லெப் .கேணல் திலீபனை நினைவு கூறுவோம். நாள்- செப்ரம்பர்-30  -இடம்- மெல்போன் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் ...

Read More »