செய்திமுரசு

ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் படகு விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது. பின்னர் படகின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர்பிழைப்பதற்காக தண்ணீரில் குதித்து நீந்தி கரையேறி உள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்த ...

Read More »

ஆஸ்திரேலியா அறிவித்துள்ள புதிய திட்டமூடாக அகதிகளை குடியமர்த்துவது எப்படி?

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Read More »

மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நபர்

சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 25). இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை ...

Read More »

பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் பயங்கர வெடிவிபத்து- 2 பேர் பலி

வெடிவிபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More »

சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவர மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வரை தற்போதைய தடை உத்தரவை நீடிப்பதாகவும் அவர் உத்தரவிட்டார். கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் ...

Read More »

கப்பல் விபத்து – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது. குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதி முதல் மாசடைந்த கடல் மற்றும் கடலோர பகுதியை சுத்தம் செய்வதற்காக மாத்திரம் குறித்த பணம் செலவிடப்படவிருப்பதாக. சூழல் பாதுகாப்பு ...

Read More »

நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் ‘அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு’ என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் ...

Read More »

சிட்னி விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆன்டனி அப்பாத்துரை ஒரு பாரிஸ்டாவைக் காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 73 வயதான குற்றவாளி, ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவ்வாறான முறைகேடான நடத்தையில் ஈடுபட்டமைக்காக 2022 டிசம்பர் 2022 வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 13 வயது சிறுவன், 26 வயது ...

Read More »

ஆஸ்திரேலியா: வெளிநாடுகளில் Sinopharm தடுப்பூசி போட்டுள்ள பெற்றோர் இங்கு வருவதில் சிக்கல்!

வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்களின் நெருங்கிய குடும்பத்தினர் அங்கு சில வகை கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் போது கட்டாயம் விடுதியில் தனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.

Read More »