செய்திமுரசு

தேர்தலுக்கான அரசியல் !

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கின்றது. நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தின்போது ...

Read More »

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 14ம் திகதிக்கு பின்னர்!

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர் வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளி வரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இன்று (11) அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு ...

Read More »

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நா. கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் 117 ஆவது கூட்டத் தொடர் பொஸ்னியாவிலும், ஹெசகோபினாவிலும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் 37 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளது. அத்துடன் இதில் இலங்கையும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அபுதாபி நீதிமன்றம் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு!

அபுதாபி  நீதிமன்றங்களில்   இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும். அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் ...

Read More »

ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்!

ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். 10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கிபாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த நிலையில் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த முறை நாங்கள் உலக ...

Read More »

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்?

கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள். ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் ...

Read More »

தலைவர் பிரபாகரன் வழியில் பாவமன்னிப்பு வழங்கினாராம் விக்கி!

வாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து வந்துள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி : ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான்எச்சரித்தேன் அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள் தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது  நடந்ததைப் பார்த்தீர்களா? அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே! நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா? பதில்- கட்டாயம் சரி! மூளை உள்ளவன் தன்நலங் கருதி இவ்வாறானவற்றைத் தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன்!

அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதாலையே இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள குனுன்நூரா பகுதியின் அருகாமையில் அந்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அச்சிறுவனின் குடியிருப்புகளை சுற்றி சண்டை சச்சரவுகளும், மதுவுக்கு அடிமையானவர்களுமே அதிகம் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இதனாலையே பல குடியிருப்புகளை ...

Read More »

நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன்!-நளினி

வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 7 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உணவு சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் பெண்கள் சிறையில் உள்ள ...

Read More »

மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை!

மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு போராட்ட மக்களுக்கும் சிறுவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று(9)ஒருதொகுதி உதவிகளை வழங்கிவைத்துள்ளார். இதேவேளை, கேப்பாப்புலவில் 709ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவு பொருள்களையும் வழங்கிவைத்துள்ளார். அத்துடன், கேப்பாப்புலவில் போராட்ட மக்களை சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுட்ட மக்கள் தொடர்பில் மக்கள் கருத்துககளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்துரைத்த ...

Read More »