அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதாலையே இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள குனுன்நூரா பகுதியின் அருகாமையில் அந்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அச்சிறுவனின் குடியிருப்புகளை சுற்றி சண்டை சச்சரவுகளும், மதுவுக்கு அடிமையானவர்களுமே அதிகம் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனாலையே பல குடியிருப்புகளை குறித்த சிறுவன் அடிக்கடி மாற்றி வந்துள்ளான். மேலும், பல காலம் நிரந்த குடியிருப்பு ஏதுமின்றியும் தவித்துள்ளான்.
தற்கொலை செய்து கொள்வதன் ஒரு நாளுக்கு முன்னர், தமது தாயாரிடம், தாம் புதிய பாடசாலைக்கு செல்ல இருப்பது தொடர்பில் பகிர்ந்துகொண்டுள்ளான்.
கடந்த ஆண்டு தமக்கு நேர்ந்த கொடுமை தொடர்பில் காவல் துறையினர் புகார் அளிக்க அச்சம் தெரிவித்த சிறுவன், அந்த புகாரால் தமது எதிர்காலம் சீரழியும் என கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2012 முதல் 16 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பழங்குடியின சிறுவர்கள் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகியுள்ளதாக காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தற்கொலை செய்து கொள்வதும் பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆதரவின்றி தவிக்கும் பழங்குடியின சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.