செய்திமுரசு

மன்னார் எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்டோருடையதா ?

மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார். வருடந்தோறும் தேசிய ரீதியில் நடைபெறும் இயேசு பிராரின் பிறப்பும், நத்தார் கொண்டாட்டமும் மன்னாரில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, கடந்த மூன்று வாரங்களாக மிகவும் கொந்தளிப்பாக இருந்த இலங்கை அரசியல் ...

Read More »

முன்னாள் போராளியின் விடுதலைவேண்டி மனைவி குழந்தைகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

வவுணதீவில் சிறிலங்கா காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். அஜந்தனின் மனைவி தனது இரண்டு மாதமேயான குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுடன் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு, கன்னன்குடாவில் வசிக்கும் கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் (அஜந்தன்) என்ற முன்னாள் போராளி வவுணதீவுகாவல்துறையினரால்  கடந்த 30ம் திகதி அன்று கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று கிளிநொச்சி ...

Read More »

நாடற்ற நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகள்!

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பசிபிக் தீவு நாடான பப்பு நியூ கினியானவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலருக்கும் பப்பு நியூ கினியா பெண்களுக்கும் பிறந்த 39 குழந்தைகள், நாடற்ற நிலையை எதிர்கொள்வதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரின் சமீபத்தின் தகவல்படி, சுமார் 750 அகதிகள் பப்பு நியூ கினியாவில் உள்ளனர். அதே சமயம், தற்போது குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் புதிதான ஒரு நிகழ்வல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கு ...

Read More »

டுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்!

இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறார். டுபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர். மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் ...

Read More »

முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது!

முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது  இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக அரசாங்கம்  நிறுத்தவேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.   ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி என்பவரை விசாரணைக்காக 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் ...

Read More »

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.   வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தவறேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் ...

Read More »

மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்?

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் ...

Read More »

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்

கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஆட்கடத்தல் படகுகளை தடுக்க வருகிறார் பீரங்கி மனிதர்!

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வர முயலும் ஆட்கடத்தல் படகுகளை தடுக்கும் நடவடிக்கைக்காக புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கிராக் புர்னி நியமிக்கப்பட்டுள்ளார். ‘எல்லைகளின் ஆட்சி உரிமைக்கான நடவடிக்கை’க்கு (Operation Sovereign Borders) புதிய தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர், பாதுகாப்பு துறையில் கிராக் புர்னி கொண்டுள்ள அனுபவம் அவரை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிப்பதற்கான சிறந்த தகுதியுடையவராக உருவாக்கியுள்ளது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையின் நான்காவது தளபதியாக கிராக் ...

Read More »

எகிப்து நாட்டில் 4400 ஆண்டுகள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டின் பாலைவனப் பகுதிகளில் பிரமிட்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மி எனப்படும் கல்லறைகள் பரவலாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தங்களது முன்னோர்களின் நினைவாக இந்த கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே உள்ள சக்காரா பிரமிட் அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான ஒரு மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த ...

Read More »