செய்திமுரசு

கைக்குண்டு, வாள்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை  நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல் துறையினர் தெரிவித்தனர். மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் ஐயங்கேணி பிரதேசத்தில் வைத்து ஒரு கைக்குண்டு 4 வாள்களுடன் இரு இளைஞர்களை கைதுசெய்து ஏறாவூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர் .   இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விபுலானந்தபுரம் ...

Read More »

அமெரிக்க குடியுரிமை விவகாரம்; உறுதிப்படுத்தியது எதிர்க்கட்சி!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவார் என்கிற அச்சத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து கோட்டாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் இதன்போது விமல் ...

Read More »

அமெரிக்க உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா!

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார். இவர் டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்த நிலையில், ...

Read More »

இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் !

இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் திகதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் திகதி, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தன. இதற்கு பதிலடி தருவதற்காக, மறுநாள், இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென வெடித்து சிதறிய கார்: குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாய் ஒருவர், கார் வெடித்து சிதறுவதற்கு சில வினாடிகளுக்கு முன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேத்ரின் மேய்ஸ் என்கிற தாய் தன்னுடை நான்கு வயது மற்றும் ஐந்து மாத குழந்தையுடன் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அவருடைய காரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேட்டரியில் இருந்து வினோதமான ஒலி எழுந்துள்ளது. உடனே தன்னுடைய 4 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் வந்துள்ளார். கார் முழுவதும் புகை சூழ ஆரம்பித்துள்ளது. தீவிரத்தை உணர்ந்த கேத்ரின் வேகமாக தன்னுடைய ...

Read More »

காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாலையில் உயிரிழந்தார்!

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை  வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(06) யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது. குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அன்று மாலை நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மாலை வீடு ...

Read More »

மின்சார நெருக்கடிக்கு விசேட நடவடிக்கை !

மின்சார நெருக்கடியினை தீர்க்க அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி தனியார் துறையினரிடமிருந்து 500 மெகாவொட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்து, நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More »

தொடரும் மீறல்கள்!

சட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு ...

Read More »

அவுஸ்திரேலிய பெண்ணின் சாதனை யூடியூபில் 1.3 மில்லியன் பேர் பார்த்த காணொளி!

அவுஸ்திரேலியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்துள்ளதை இதுவரை 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். Sarah Stevenson என்ற பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சிட்னியை சேர்ந்த இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த வேதனையை பகிர்ந்துகொண்டதன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார் . 30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தனது உடலை அமைதிப்படுத்தி குழந்தை பெற்றெடுத்துள்ளார். அனுபவித்த வலிகள் முதல் அவர் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அனைத்தும் காணொளி இடம் பெற்றுள்ளன. இதற்கு Sarah ...

Read More »

நான்கு தசாப்தங்களின் பின்னர் அமுலாகுமா மரணதண்டனை ?

ஜனாதிபதி திகதியை தீர்மானித்து விட்ட நிலையில் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த தர்க்கங்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒரு சந்திப்பு. வரலாற்றுத் தர்க்கம் ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருக்கிறான். பாவத்தை செய்கின்றான் என்றால் சமூகத்தின் நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென மதகுருவும் தத்துவஞானியுமான தோமஸ் அக்கியுனஸின் கருத்தை பிரதிபலிப்பவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருமாறு வற்புறுத்துகின்றனர். அது குற்றங்களைத் தடுக்கும் என்பதே அத்தகையவர்களின் பிரதான வாதமாகவுள்ளது. மரண தண்டனை விதித்தல் குற்றங்களை குறைக்கும் அல்லது குற்றம் புரியாதவாறு குற்றவாளிகளைத் ...

Read More »