செய்திமுரசு

யாழில் S. P. Bயின் நண்பேன்டா இசை நிகழ்ச்சி !- இந்தியச்சதி

அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த ...

Read More »

பிரதமராக தகுதியற்றவன்! பணிவுடன் வாய்ப்பை மறுத்தார் ஈழத்தமிழர்

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன். அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தியாகதீபம் திலீபன் நினைவுப்பாடல்

தியாகி திலீபன் நினைவு பாடல் ஒன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் கலை பண்பாட்டுக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  

Read More »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக வழங்கப்படவுள்ளது. விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் திருமதி. ராஜி வல்லிபுரநாதன் ...

Read More »

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். ...

Read More »

ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்

360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிட்சை  செய்ய உள்ளார். இதனால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது. இந்த தொடருக்கு ...

Read More »

‘எழுக தமிழ்’ ஒரு வரலாற்றுப் பதிவு! அனைவருக்கும் எமது நன்றிகள்!

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தது, ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், வரலாற்றுப்புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில், மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி ...

Read More »

நாடு திரும்பும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 20,000 டொலர்

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக தமது தாய் நாடு திரும்புவதற்கு சம்மதிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 10,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் தற்போது இத்தொகை 20,000 டொலர்களாக ...

Read More »

ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் செய்வதாக அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் எழுத்து மூல வாக்குறுதியையடுத்து எதிர்வரும் ...

Read More »

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை

உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று(27) கையொப்பமானது. கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் ‘பார்க்’ (FARC) அமைப்பு 1964-ம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறது. தென்அமெரிக்காவின் வடமுனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. பல்வேறு பழங்குடிகளைக் கொண்ட கொலம்பியா 1499-ம் ஆண்டு ஸ்பானிய ...

Read More »