செய்திமுரசு

சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை!

சிட்னியில் இருந்து புறப்பட்ட சீன விமானத்தின் இயந்திரத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சிட்னியில் தரையிறக்கப்பட்டது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சீனாவின் ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது. ஏ-330 ஏர்பஸ் வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 265 பயணிகள் இருந்தனர். சிட்னியில் இருந்து புறப்பட்டு விமானம் 70 கிலோ மீட்டர் தூரம் சென்றிருந்தது. அப்போது இடதுபுற என்ஜினில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 4.7 கோடி டாலர்கள் செலவில் தனிச் சிறை!

அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாதிகளுக்கு என்று 4.7 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் தனிச் சிறை கட்ட அரசு தீர்மானித்துள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தியும், தாக்குதலுக்கு திட்டம் தீட்டியும் கைதாகும் நபர்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்கவும், ஆபத்தான தீவிரவாதிகளை கண்டதும் சுட்டுக் கொல்லவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் பரோலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்துவகை சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், அங்கிருக்கும் இதர கைதிகளையும் மூளைச் சலைவை செய்து தீவிராதிகளாக ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களை அமைக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகங்களை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அமைப்பது குறித்து உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடையே கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த அலுவலகங்களினூடாக இலவச சட்ட ஆலோசனைகளை காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். மேலும் காணாமல் ...

Read More »

அவுஸ்ரேலியா வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி இங்கிலாந்து அணி, வங்கதேசத்தையும் அரைஇறுதிக்கு அழைந்து சென்றது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு அவுஸ்ரேலிய களம் இறங்கியது.  இங்கிலாந்து அணி கப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ...

Read More »

இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது அவுஸ்ரேலியா!

வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது அவுஸ்ரேலியா. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி தனது இரண்டு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அவுஸ்ரேலியா விளையாடிய இரண்டு போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் வங்காள தேசம் ...

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் அவுஸ்ரேலியா பேட்டிங்

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் அவுஸ்ரேலியா அணி டாஸ் தோல்வியடைந்து பேட்டிங் செய்ய உள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டு போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் அவுஸ்ரேலியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படிஅவுஸ்ரேலியா ...

Read More »

சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன. 2018ம் ஆண்டுக்கான QS World University ranking என்ற தரப்படுத்தலிலேயே 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. இதில் 989 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தநிலையில் Australian National University 20வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய பல்கலைக்கழகங்கள் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பதை கீழே உள்ள படம் காட்டுகின்றது. இதேவேளை QS World University தரப்படுத்தலின்படி சர்வதேச ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக்கழங்களின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அடிமைகளாக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய காரணத்தினால் துப்பரவுச் சேவை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியை தளமாகக் கொண்டுள்ள இந்த துப்பரவு நிறுவனம் தனது 51 தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களை அடிமைகள் போல் நடத்தியுள்ளது. இதற்கு அபராதமாக $447,300 டாலர்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 2011 தொடக்கம் 2013 வரை வேலை செய்த 49 பணியாளர்களுக்கு $223,000 டாலர்கள் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளர்களென்றும் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவே இருந்துள்ளதென்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு இங்குள்ள சட்ட விதிகள் ...

Read More »

யாழ்ப்பாண தர்ஜினிக்கு அவுஸ்ரேலியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கீகாரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார். வலைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக செயற்பட்டு வரும் தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்ரேலியாவின் City West Falcons கழகத்திற்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், VICTORIAN NETBALL LEAGUE போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது வரையில் 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் இறுதியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், தர்ஜினி சிவலிங்கம் விளையாடிய கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தொடரில் இதுவரையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜினி சிவலிங்கம் 227 கோல்ஸ் ...

Read More »

லண்டன் தாக்குதலின்போது மக்களுக்கு உதவும் நோக்குடன் செயற்பட்ட அவுஸ்ரேலிய பெண்!

லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்ரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். லண்டனில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் தற்போது வரையில் 8 பேர் பலியானதுடன், 48 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையான Kirsty Boden என்ற பெண்ணின் பெயரை புகைப்படத்துடன் லண்டன் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். Kirsty Boden என்ற 28 வயதுடைய குறித்த அவுஸ்திரேலிய நாட்டு பெண், லண்டன் நகரில் தொழில் ...

Read More »