லண்டன் தாக்குதலின்போது மக்களுக்கு உதவும் நோக்குடன் செயற்பட்ட அவுஸ்ரேலிய பெண்!

லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்ரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

லண்டனில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் தற்போது வரையில் 8 பேர் பலியானதுடன், 48 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையான Kirsty Boden என்ற பெண்ணின் பெயரை புகைப்படத்துடன் லண்டன் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Kirsty Boden என்ற 28 வயதுடைய குறித்த அவுஸ்திரேலிய நாட்டு பெண், லண்டன் நகரில் தொழில் புரிந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், Kirsty Boden இன் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளனர்,

“குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலனால் நேசிக்கப்பட்டவர். மக்களை நேசிப்பதில் மிகவும் பிரியமானவர். அளவுக் கடந்த அன்பு கொண்டவர்.

தாதியாக பணிபுரிந்த Kirsty Boden, தாக்குதல் நடந்த போது மக்களுக்கு உதவும் நோக்குடன் ஓடினார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் கொல்லப்பட்டார்.

Kirsty Boden இன் தைரியமான செயல்களுக்கு நாம் பெருமிதம் கொள்கிறோம். சுயநலமின்றி, அக்கறையுடன் ஒரு கதாநாயகி போல் அவர் செற்பட்டுள்ளார். இது எங்களுக்கு பெருமையாகவே உள்ளது” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

PAY-KIRSTY-BODEN