வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்வாறு பெட்டிக்கு ...
Read More »செய்திமுரசு
ஆஸி.யின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த்!
எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக அடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதுடைய அடம் கிரிப்த் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் முதல் தர வீரரான 53 வயது டிராய் கூலே எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆஷஸ் தொடர் முடியும் வரை அணியினருடன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவுஸ்திரேலிய ...
Read More »மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இன முரண்பாடுகளை களையமுடியாது!
எம்மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார். கண்டி ஓக்ரைன் ஹோட்டலில் இண்டர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்விலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் மனித உரிகைள் ஆணைக்கு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. தனி நபர் ஒவ்வொருவரதும் மனதில் ...
Read More »இந்திய படை சிறிலங்கா வருகை!
சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும்சிறிலங்காவில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 சிறிலங்கா இராணுவத்தினர் பங்குபற்றினர். இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று சிறிலங்கா இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி!
கடந்த 48 மணித்தியாலத்தில் இரண்டாவது முறையாக வடக்கு அவுஸ்திரேலியாவில் வெரோனிக்கா சூறாவளி தாக்கியுள்ளது. வட மேற்கு கரையோரப்பகுதியான பில்பரா பகுதியில் மையம் கொண்டிருந்த வெரோனிகா புயல் இன்று அதிகாலை மீண்டும் 95 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பில்பராவில் நேற்று முன்தினம் சுமார் 180 மில்லிமீற்றர் ...
Read More »அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த!
மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற வகையில், இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டாளராகக் ...
Read More »52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள்!
சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களுக்கு பாலியல் கொடுமையா?
ஆசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2015 அல்லது 2016 ஆம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் 25 சதவிகிதம் பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியிலும், 51 சதவிகித மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு காரணமான நபர்கள் குறித்து தெரிந்தும் அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள் என மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 39 பல்கலைக்கழகங்களில் உள்ள ...
Read More »மின்தடை பற்றிய முக்கிய அறிவிப்பு !
நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் இரு கட்டங்களாக நான்கு மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் முதல் கட்டமாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்கள் பிரதேச அடிப்படையில் மின்சார தடை அமுல் செய்யப்படவுள்ளது. அத்துடன் அதே போல் நாளாந்தம் இரண்டாம் கட்டமாக ...
Read More »இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம் தெரிவித்தார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் மேலும் தெரிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது சிறுவனொருவன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...
Read More »