எம்மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்தார்.

கண்டி ஓக்ரைன் ஹோட்டலில் இண்டர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான செயலமர்விலே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் மனித உரிகைள் ஆணைக்கு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது. தனி நபர் ஒவ்வொருவரதும் மனதில் மாற்றம் வரவேண்டும். மனப்பாங்கு மாற்றம் வராத வரையில் எதனையும் மாற்ற முடியாது.கடந்தகால அனுபவங்களை நோக்கும் போது இனி திகனை சம்பவங்களோ அல்லது வடகிழக்க யுத்தமோ ஏற்படக்கூடாது என்று சகலரும் ஏற்றுக் கொண்டாலும் எமது மன நிலையைப் பொறுத்தே அது தீர்வாக அமையும். ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அது நிரந்தரத் தீர்வாகக் கொள்ள முடியாது.

நிரந்தரமாக அதனை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். எனவே மனித உரிமை ஆணைக்குழு , பொலிஸ், சட்டம், நீதி மன்றம் அனைத்து மக்களுக்காகவே . இவற்றை சரியான முறையில் அனுகி பயன் பெற்று ஒற்றுமையை நிலையநாட்ட வெண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.