வடக்கு கிழக்கில் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடலாம். அவர்களின் உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கவேண்டும். எனவே நினைவேந்தலை இராணுவம் ஒரு போதும் தடுக்காது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் அவசரகால சட் டம் நடைமுறையில் உள்ளதை கருத்தில் கொண்டு அமைதியாக அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் குறித்து இராணுவ தளபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வடக்கின் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு ...
Read More »செய்திமுரசு
முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுங்கள்!!
முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளை 18 ஆம் திகதி நடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ...
Read More »நாடுகடத்தல் அபாயம்! நடேசலிங்கம் குடும்பம் தொடர்பில் மீள்பரிசீலனை?
நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நடேசலிங்கம், ப்ரியா குடும்ப விடயத்தை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அவுஸ்திரேலிய தொழில் கட்சியின் தலைவரான பில் சோட்டன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக தான் தெரிவானால், உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம், ப்ரியா குடும்பத்தினர், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தால் கடந்த தினம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை ...
Read More »“நல்லூர் ஆலயத்தை தாக்க திட்டம்…”- அநாமதேய கடிதம்
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்த அநாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த அநாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்கவுள்ளனர்” என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் ...
Read More »அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்!
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Bob Hawke இன்று காலமானார். தனது 89 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் லேபர் கட்சித் தலைவரான இவர் தனது வீட்டில் இயற்கைமரணம் அடைந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவரது மரணத்தைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Bob Hawke அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர் என பிரதமர் Scott Morrison புகழாரம் சூட்டியுள்ளார். அவுஸ்திரேலியா தனது விருப்பத்திற்குரிய மகனை இழந்துவிட்டது என லேபர் கட்சியின் தற்போதைய ...
Read More »புர்கா தடை என்னும் அக்கினி!
“புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். “பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது புர்கா/ நிகாபை பாதுகாப்புக் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இதுவரை 17 பேரை பலியெடுத்த நோய்!
அவுஸ்திரேலியாவில் பருவ கால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலில் (flu) இதுவரை பலர் உ யிரிழந்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேரை இந்த வைரஸ் பலியெடுத்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வைரஸ் காய்ச்சல் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்தக்காலப்பகுதியில் 1328. ஆனால், இந்த வருடம் இதுவரை 12 ஆயிரத்து 339 பேர் இந்தக்காய்ச்சலால் ...
Read More »தற்கொலை குண்டுதாரிகளின் 17 பாதுகாப்பான வீடுகள் முற்றுகை!
இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல் துறை இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் கொழும்பில் மட்டும் 3 வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் காவல் துறை விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர். அந்தவகையில் தற்கொலை குண்டு ...
Read More »சிரியாவில் ஐ.எஸ் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்!
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன. அதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் ...
Read More »23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!
நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார். நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார். மற்ற 2 ...
Read More »