கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது.கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார். அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், ...
Read More »செய்திமுரசு
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் ...
Read More »உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத்தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா!
சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது. சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், ...
Read More »1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம்!
சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த கைதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யப்படவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.தென்னகோன் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதன் காரணமாக, சிறைச்சாலைகளில் இருக்கும் சிறுகுற்றங்களுக்காக ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும், பிணை செலுத்த முடியாமல் இருப்பவர்களையும் விடுதலை செய்வது குறித்து ஆராய ஜனாதிபதி கோத்தாபய ;ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்திருந்தார். இக்குழுவின் ...
Read More »டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர்
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாரக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் அக்டோபர் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந்திகதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் ஐபிஎல் 2020 சீசன் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் 15-ந்திகதி வரை ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு ...
Read More »கரோனா வைரஸால் கலங்கும் உலக மக்கள்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிிற்கிறார்கள். நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 152 பேர் பலியாகியுள்ளனர். 9,583 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை நாடான ஜப்பானில் 52 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர். 1,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை வடகொரியாவில் என்ன நடக்கிறது? அங்கு கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா, பரவல் என்ன, ...
Read More »உறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை
நியுயோர்க்கின் மருத்துவர் காமினி டுபேயிற்கு நகரத்தின் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரிற்கு மரணம் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பது தெரிந்திருந்தது. ஆனால் அது இப்படியானதாக ஒரு போதும் இருந்ததில்லை.கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்,சுவாசிக்க முடியாமல் வென்டிலேட்டரில் திணறுவது,நோய் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான விதிமுறைகள் காரணமாக நோயாளியை உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ,போன்ற சூழல் காணப்படுகின்றது. அனேக தருணங்களில் நோயாளிகள் தங்கள் படுக்கையில் தனித்து மரணிப்பார்கள்,என தெரிவிக்கும் டுபே நான் ஐசியூவிலிருந்து உறவினர்களை அழைத்து விடயத்தை தெரிவிக்கும்போது அவர்களின் துயரத்தை பார்ப்பதும், ...
Read More »புத்தளத்தில் 100 பேரை தனிமைப்படுத்த தீர்மானம்
புத்தளம்- கடையங்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புத்தளம் மாவட்டச் செயலாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதற்கமைய, புத்தளம்- சாஹிரா தேசிய பாடசாலையின் ஒரு பகுதியை தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்த நடவடிககை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »மூன்று ஊர்கள் முடக்கம்
புத்தளம் கடையன் குளம் மற்றும் கண்டி அக்குரணை பகுதியில் உள்ள இரண்டு ஊர்களையும் முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய விதிகளை கடைபிடிக்கும் அவுஸ்ரேலியா!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக முக்கிய இடங்களை மூடுவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை ஏற்படுத்த மக்கள் வீடுகளில் இருக்குமாறும் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கையுடன் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு வயதான பெண் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அம் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ...
Read More »